நாகர்கோவில் – கோவை ரயிலில், இரும்பு கம்பிக்கள் அறுந்ததால், படுக்கை கீழே விழுந்தததில், சிறுவன் பலத்த காயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் ஆசிரியர் காலணியை சேர்ந்தவர் மேத்யூ. இவரது மனைவி புவிதா. இவர்களுக்கு, ஜாய்சன் தாமஸ் என்ற ஒரு மகன் இருக்கிறார். வங்கியில் மேலாளராக பணியாற்றி வரும் புவிதா, தனது மகனை அழைத்துக்கொண்டு சொந்த ஊரான தூத்துக்குடிக்கு சென்றுள்ளார். அதன்பிறகு நேற்று முன்தினம் மீண்டும் கோவை செல்வதற்காக புறப்பட்ட புவிதா, தனது மகனுடன், நாகர்கோவில் – கோவை ரயிலில், வாஞ:சி மணியாச்சியில் நிலையத்தில் ஏறியுள்ளார்.
எஸ்.7 முன்பதிவு பெட்டியில் ஏறிய அவர், தனது மகனுக்கு படுக்கை தயார் செய்துவிட்டு, தனது படுக்கைக்கு சென்றபோது, திடீரென இரும்பு மெலடுக்கு படுக்கையை தாங்கிபிடிக்கும் இரும்பு கம்பி அறுந்து விழுந்தததில், 4 வயதான புவிதாவின் மகன் ஜாய்சன் தாமஸ் பலத்த காயமடைந்தார். இது குறித்து உடனடியாக புவிதா பயணச்சீட்டு பரிசோதகரிடம் புகார் அளித்த நிலையில, அவர் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து விருதுநகர் ரயில் நிலையத்தில் சுகாதார பணியாளர் ஒருவர் முதலுதவி அளித்த நிலையில், மதுரை ரயில் நிலையத்தில் மருத்துவ குழு தயாராக இருக்கும் என்று கூறியுள்ளனர். அதிகாலையில், மதுரை ரயில் நிலையத்தில் இறங்கிய புவிதா அங்கு மருத்துவ குழு இல்லாத நிலையில், ஆட்டோ மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். தற்போது ஜாய்சன் தாமஸ் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மதுரை ரயில் நிலையத்தில் சிகிச்சை அளிக்க யாரும் இல்லாததால், தானே தனி ஆளாக வாடகை ஆட்டோவில், மதுரை அரசு மருத்துவமனை சென்றேன். காயமடைந்து 3 மணி நேரத்திற்கு பிறகே மகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ரயில்வே அதிகரிகள் அலச்சியம் தான் இதற்கு காரணம். இது குறித்து மதுரை ரயில்வே போலீசில் புகார் அளித்துள்ளேன். கோவை சென்று ரயில்வே மற்றும் காவல்துறையில் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க இருக்கிறேன். ரயில்வே அதிகாரிகள் இதுகுறித்து உரிய விசாதனை நடத்துவதாக கூறியுள்ளனர் என்று புவிதா தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“