நதிகளையும் இணைப்பது குறித்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் : வேளான் பட்ஜெட் குறித்து சு.பழனிசாமி கருத்து

பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளையும் இணைப்பது குறித்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளையும் இணைப்பது குறித்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

author-image
WebDesk
New Update
Agri Budget Update

தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிசாமி

தமிழக அரசு அறிவித்துள்ள வேளாண்  பட்ஜெட் அறிவிப்புகள் விவசாயிகளுக்கு போதுமான பட்ஜெட்டாக இல்லை எனவும் விவசாயிகளுக்கு கால் வயிறுதான் நிரம்பி உள்ளதாக தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிசாமி கோவையில் தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழக அரசின் 2024-25  நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். இந்த வேளாண் பட்ஜெட் குறித்து கோவையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளையும் இணைப்பது குறித்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதம் உயிர்சேதம் ஆகியவற்றிக்கு நிதி ஒதுக்கீடு இடம் பெறவில்லை. வேளாண் தொடர்பான பட்ஜெட் தயாரிப்பதற்கு முன்பாக விவசாயிகள் தொடர்பானவர்களிடம் ஆலோசணை நடத்தியிருந்தால் ஒட்டு மொத்த விவசாயிகளுக்கு பயனுள்ள பட்ஜெட்டாக இருந்திருக்கும்.

இந்தியாவிலேயே வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் போட்டது தமிழக அரசுதான் தான். அதனை நாம் எப்போதும் வரவேற்போம். விவசாயித்திற்கு அறிவித்துள்ள 36 கோடி குறைவாக இருக்கிறது.மற்ற சில ஒதுக்கீடுகளை வரவேற்கிறோம். மண் புழு உரம் தயாரிக்க,உழவர் சந்தை மேம்பாட்டுக்கு அறிவிப்பு,பசுந்தீவன உரத்திற்கு ஒதுக்கியுள்ள நிதி போன்ற அறிவிப்புகள் வரவேற்பை பெற்றிருந்தாலும் கரும்புக்கு ஒரு கிலோவிற்கு 250 ரூபாய் வீதம் ஒரு டன்னுக்கு 250 கோடி ஒதுக்கீடோடு முடித்துள்ளது.

Advertisment
Advertisements

மொத்தத்தில் இந்த பட்ஜெட் அறிவிப்பு விவசாயிகளுக்கு கால் வயிறுதான் நி்ரம்பி உள்ளது. முக்கால் வயிறு காலியாகத்தான் இருப்பது வேதனை அளிக்கிறது. தமிழக அரசு அறிவித்துள்ள வேளாண்  பட்ஜெட் அறிவிப்புகள் விவசாயிகளுக்கு போதுமான பட்ஜெட்டாக இல்லை என தெரிவித்தார்.

பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

tamilnadu budget

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: