/tamil-ie/media/media_files/uploads/2022/10/ayyakannu-arrest.jpeg)
கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம், சித்தூர் ஆகிய ஊர்களில் செயல்பட்டு வரும் தனியார் சர்க்கரை ஆலைகளில் கடந்த 2016 ஆண்டிலிருந்து இன்று வரை அப்பகுதியில் உள்ள விவசாயிகள் சுமார் 35 லட்சம் டன் கரும்புகளை உற்பத்தி செய்து வழங்கியுள்ளனர். ஆனால் சர்க்கரை ஆலை நிர்வாகம் இதுவரை அதற்கான தொகையினை திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.
அந்த அடிப்படையில் 400 கோடி ரூபாய் நிலுவை பாக்கி விவசாயிகளுக்கு திருப்பி தர வேண்டிய நிலையில், வெறும் 80 கோடி மட்டுமே திருப்பி தருவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்: அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் ஓ.பி.எஸ்., கலந்து கொண்டது ஏன்? சபாநாயகர் அப்பாவு பதில்
எனவே சர்க்கரை ஆலை நிர்வாகம் முழுத் தொகையையும் திருப்பித் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று கடலூர் தனியார் சர்க்கரை ஆலை முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருந்தனர்.
இதற்காக அவர்கள் திருச்சியில் இருந்து புறப்பட தயாராகினர். இது பற்றி தகவல் அறிந்த மாநகர போலீசார் உஷாராகினர். இன்று அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் கடலூர் புறப்படவிருந்த நிலையில், திருச்சி காவல் உதவி ஆணையர் ராஜன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் அய்யாக்கண்ணு, மேகராஜன் உள்ளிட்ட 11 பேரை கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
க. சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.