குறைந்தபட்ச ஆதார விலைக்கு நிரந்தர சட்டம் கோரி தனி நபர் மசோதா தாக்கல் செய்வேன் என ராகுல்காந்தி உறுதி அளித்துள்ளதாக பி.ஆர்.பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்.
அரசியல் சார்பற்ற சம்யுத்த கிசான் மோர்ச்சா (SKMNP) கிசான் மஜீர் அமைப்புகளின் தலைவர்களை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி பாராளுமன்ற அலுவகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதனை ஏற்று பாராளுமன்றம் சென்ற விவசாயிகள் சங்க தலைவர்களை காவல்துறையினர் அனுமதி இல்லை என தடுத்து நிறுத்தினர்.
இதனையறிந்து ஆவேசமடைந்த ராகுல்காந்தி 5 நிமிடம் அவகாசம் தருகிறேன் அதற்குள் விவசாயிகளை உள்ளே அனுமதிக்க வேண்டும் இல்லையேல் சாலைக்கு சென்று அவர்களுடன் அமர்ந்து போராடுவேன் என சபாநாயகரிடம் எச்சரித்தார். இதனையடுத்து உள்ளே அனுமதித்தனர். ராகுல் காந்தி தனது அறையில் அமர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக விவசாயிகள் கோரிக்கைகளை கேட்டு அறிந்தார்.
கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட அவர் போராட்டக் களத்தில் காவல்துறை நடத்திய தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிசூடு சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தார்.
இது குறித்து படங்களுடன் விவசாயிகள் எடுத்துரைத்தனர். குறைந்தபட்ச ஆதார விலை நிரந்தர சட்டம் கேட்டு தனிநபர் மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வேன். எம்.எஸ் சுவாநாதன் குழு பரிந்துரை நிறைவேற்றும் வரை உங்களில் ஒருவராக பாராளுமன்றத்தில் கொண்டு கொடுப்பேன். தொடர்ந்து போராடுவேன் விவசாயிகளை பாதுகாப்பதற்கு துணை நிற்பேன் என்று ராகுல்காந்தி விவசாயிகளுக்கு உறுதி கொடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்திப்பதற்கு கைகோர்த்து அழைத்து சென்று அவர் தன்னுடன் கன்னியாகுமரி பாதையாத்திரையில் நான் (பி ஆர்.பாண்டியன்) நடந்து வந்ததை தலைவர்களிடம் நினைகூர்ந்து வாழ்த்து தெரிவித்தார் என்றார். இக்குழுவிற்கு டல்லேவால் தலைமையேற்றார். சர்வன்சிங் பாந்தர், அபிமன்யூ, கர்நாடகா சாந்தகுமார் தமிழ்நாடு பி ஆர்.பாண்டியன், தெலுங்கானா ராவ் உள்ளிட்ட 12 தலைவர்கள் இடம் பெற்றனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“