Advertisment

'பிக் ஃபிஷ் ஜெயக்குமார் சிக்குவார்ன்னு எதிர்பார்க்கல' பி.டி.ஆர் காட்டம்... ஓயாத ஜிஎஸ்டி மோதல்!

Tamilnadu News Update : ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்துகொள்ளாதது குறித்து அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
'பிக் ஃபிஷ் ஜெயக்குமார் சிக்குவார்ன்னு எதிர்பார்க்கல' பி.டி.ஆர் காட்டம்... ஓயாத ஜிஎஸ்டி மோதல்!

உத்திர பிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதியமைச்ர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொள்ளாதது சமூக வலைதளங்களில் பெரும் விவாதபொருளாக மாறியுள்ளது.

Advertisment

உத்திரபிரதேச தலைநகர் லக்னோவில் கடந்த வாரம் 45-வது ஜிஎஸ்டி கவுனிசில் கூட்டம் நடைபெற்றது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்கள் பலர் கலந்துகொண்ட நிலையில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரடியாக கலந்துகொள்ளவில்லை. அவருக்கு பதிலாக நிதித்துறை செயலாளர் கலந்துகொண்ட நிலையில் பழனிவேல் தியாகராஜனின் அறிக்கை மட்டும் சமர்பிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்ளாதது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்ள கடைசி நேரத்தில் அழைப்பு வந்த்தாகவும், அதற்கு முன்பே பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதாக தான் உறுதியளித்து விட்டதால் முதல்வரிடம் இது தொடர்பாக பேசி அனுமதி பெற்று நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்றதாக கூறியுள்ளார்.

ஆனால் தற்போது இவர் கூறியுள்ள காரணம் குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகினறனர். இதில் நிதியமைச்சர் செய்தியாளர்களிடம் பேசும்போது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் களந்துகொள்ளாத்து குறித்து விளக்கம் அளித்துவிட்டு தற்போது வளைகாப்பு நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என்று கூறியிருந்தார்.  இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை விட உறவினர் வீட்டு வளைகாப்பு முக்கியமா என்று கேட்டிருந்தார்.

பாஜக தலைவர் அண்ணாமலையின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாக வந்த நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக நிதியமைச்சரின் அலுவலக ட்விட்டர் பதிவில், நிதியமைச்சர் பங்கேற்றது அரசு தரப்பில் நடத்தப்படும் சமூதாய வளைகாப்பு நிகழ்ச்சி என்று கூறப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து  ஜிஎஸ்டி கூட்டத்திற்கு செல்ல, அமைச்சர் முதல்வர் ஸ்டாலினிடம் தனி விமானம் கேட்டதாகவும், அது கிடைக்கவில்லை என்பதால், அவர் டெல்லி செல்லவில்லை என்றும், உறவினர் வீட்டு பூப்புனித நீராட்டு விழா காரணத்தால் அவர் டெல்லி செல்லவில்லை என்று பல தகவல்கள் வெளியானது.

இந்த தகவல்களுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில்,  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வரும் நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக பாகவினருக்கும் நிதியமைச்சருக்கும் இடையே காரசாரமான டவிட்டர் விவாதம் நடைபெற்று வரும் நிலையில், தற்போது இந்த விவாதத்தில் புதிதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இணைந்துள்ளார்.

நிதியமைச்சரை விமர்சிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் ஜெயக்குமார் தனது பதிவில், தமிழ்நாடு மக்களின் உரிமைகளை நிலைநாட்டுகிற ஜிஎஸ்டி கூட்டத்தில் பிடிஆர் கலந்து கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது. அதற்கு அவர் சொல்லுகிற காரணமும் ஏற்க கூடியதாக இல்லை. நான் மக்கள், மற்றும் வணிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் 30க்கும் மேற்பட்ட கூட்டங்களில் கலந்து கொண்டு இருக்கிறேன். ஒரு கூட்டத்தில் கூட கலந்து கொள்ளாமல் இருந்தது கிடையாது. நிதி அமைச்சர் தனது கடமையை செய்யாமல் இருப்பது தமிழ்நாடு மக்களுக்கு செய்யும் துரோகம்.. தம்பி பிடிஆர் கவனத்தில் கொள் என்று கடுமையாக செய்திருந்தார்.

தற்போது இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதிவிட்டுள்ள நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஒன்றிய நிதியமைச்சர் & கவுன்சலால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நான் அனுப்பிய 14பக்க அறிக்கையை பகிர்வதற்கு முன் சில கயவர்களின் ஜிஎஸ்டி கவுன்சிலின் விதிகள் பற்றிய அறியாமையை வெளிக்கொணர காத்திருந்தேன் முன்னாள் அமைச்சர் போன்ற பெரிய மீன் சிக்குமென நினைக்கவில்லை மேலும் வேடிக்கைகளை எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து மற்றொரு பதிவில், தான் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு ஏன் செல்லவில்லை என்பது குறித்து விளக்கம் அளித்துவிட்டேன். அதோடு மட்டுமல்லாமல், ஜிஎஸ்டிகவுன்சிலுக்கான் 14 பக்கம் கொண்ட எனது அறிக்கையை சமர்பித்துவிட்டேன் நிதியமைச்சரும் எனது அறிக்கையை ஏற்றுக்கொண்டார். தமிழகம் சார்பாக கலந்துகொண்ட நிதித்துரை செயலாளரும் நாள் அளித்த கருத்துக்களை கூட்டத்தில் தெரிவித்துவிட்டார். சுமோகமாக முடிந்த இந்த செயல் குறித்து பலரும் வதந்திகளை பரப்புகின்றனர் என்று கூறியுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jayakumar Ptrp Thiyagarajan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment