Advertisment

உறவினர் வளைகாப்பு விழாவில் பிடிஆர்... அண்ணாமலை சொன்னது சரியா?

Tamilnadu News Update : ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் லக்னோவில் நடைபெற்றது. அதற்கு சென்று வரவே ஒன்னரை நாட்கள் ஆகும். ஆனால் அதற்கு முன்பாக இங்கு நிகழ்ச்சி வருவதாக உறுதி அளித்துவிட்டேன்.

author-image
WebDesk
New Update
உறவினர் வளைகாப்பு விழாவில் பிடிஆர்... அண்ணாமலை சொன்னது சரியா?

Tamilnadu News PTR vs Annamalai : தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்ளாததற்கு காரணம் அவர் உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றதுதான் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. இது குறித்து பேசியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றதால் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு செல்லவில்லை என ஒரு நிதியமைச்சர் கூறி இருக்கிறார். இதெல்லாம் ஒரு பதிலா ” என பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

Advertisment

உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் கடந்த 17-ந் தேதி 45-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்கள் கலந்துகொண்டனர். ஆனால் தமிழகம் சார்பாக இந்த கூட்டத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொள்ளாத நிலையில், அவருக்கு பதிலாக நிதித்துறை செயலாளர் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் பழனிவேல் தியாகராஜன் சார்பாக அறிக்கை சமர்பிக்கப்பட்டது.

இந்நிலையில் செப்டம்பர் 17-ம் தேதி மதுரையில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்ளாதது குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர் ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்துகொள்ள மிக தாமதமாக அழைப்பு வந்தது. இப்போதுதான் ஒரு மாதத்திற்கு மேல் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்தது. திருத்திய நிதிநிலை வரவு செலவு திட்டம மானிய கோரிக்கை என பல பணிகள் மேற்கொண்டதால் தொகுதியில் அந்த அளவிற்கு ஈடுபாடு இருக்க முடியவில்லை.

இதனால் செப்டம்பர் 13-ந் தேதி சட்டசபை கூட்டம் முடிந்து விடும் எனும் நம்பிக்கையில் 16-ல் இருந்து 20 வரைக்கும் ஒரு நாளைக்கு 3 முதல் 4 நிகழ்ச்சிகள் என உறுதிக் கொடுத்து விட்டேன். அப்போது ஜிஎஸ்டி கூட்டம் குறித்து அழைப்பு வரவில்லை. மாறாக செப்டம்பர் 10-ம் தேதிக்கு பிறகு கூட்டத்திற்கான அழைப்பு வந்தது. ஆனால் என்னை தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்கு செய்ய வேண்டிய வேலை இருக்கு. இன்று ஜி.எஸ்.டி கவுன்சில் நடக்குது இங்கு ஸ்மார்ட் சிட்டி ஆய்வு நடக்கிறது. முன்பு கூட்டத்தில் பெரிதாக அஜெண்டாக்கள் இல்லை ஆனால் 3 நாட்களுக்கு முன்பாக கூடுதல் அஜெண்டாக்கள் வந்தது. அதில் 500 பக்கத்தையும் படித்து இந்த அஜெண்டாக்கள் குறித்து தமிழகத்தின் நிலைப்பாட்டை எழுதி கொடுத்து விட்டேன் என்று கூறியிருந்தார்.

மேலும் இந்த கூட்டம் டெல்லியில் நடைபெற்றிருந்தாலும் பரவாயில்லை. ஒரு விமானத்தில் சென்று வந்திருக்காலம். ஆனால் லக்னோவில் நடைபெற்றது. அதற்கு சென்று வரவே ஒன்னரை நாட்கள் ஆகும். ஆனால் அதற்கு முன்பாக இங்கு நிகழ்ச்சி வருவதாக உறுதி அளித்துவிட்டேன். அதனால்தான் ஜி.எஸ்.டி கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்றும் தற்போது வளைகாப்பு நிகழ்ச்சிக்கு போறோம் எனவும் கூறியிருந்தார்.

இந்த பேட்டியில் அவர் வளைகாப்பு நிகழ்ச்சி என்று கூறியது உறவினரின் வளைகாப்பு நிகழ்ச்சி என்று தவறாக புரிந்துகொள்ளப்பட்டு சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால் அவர் வளைகாப்பு நிகழ்ச்சி என்று கூறியது அரசு விழாவாக நடத்தப்படும் சமூதாய வளைகாப்பு என்பது பிடிஆரின் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.  

இது தொடர்பாக வெளியான ட்விட்டர் பதிவில்,  மதுரை மாவட்டம் சமூக நலன் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் மதுரை மத்திய தொகுதியை சேர்ந்த 150 கர்ப்பிணிப் பெண்களுக்கு மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் சீர்வரிசை பொருட்களை வழங்கினார் ” என புகைப்படங்களுடன் பதிவிட்ப்பட்டுள்ளது. இதன் மூலம் நிதியமைச்சர் உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சியினால் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்திற்கு செல்லவில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை கூறுவது தவறான தகவல் என தெரியவந்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Annamalai Ptrp Thiyagarajan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment