Advertisment

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ1000... நிதி அமைச்சர் பி.டி.ஆர் முக்கிய அறிவிப்பு

Tamilnadu News : "விலையில்லா திட்டங்களை எதிர்ப்பவர்கள் கொரோனா தடுப்பூசி மற்றும் பரிசோதனையை இலவசமாக வழங்கும்போது மட்டும் அமைதியாக உள்ளனர். காரணம், இங்கு அனைவருக்குமான தேவைகள் மாறுபடுகின்றன.

author-image
WebDesk
New Update
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ1000... நிதி அமைச்சர் பி.டி.ஆர் முக்கிய அறிவிப்பு

Tamilnadu News Update : கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில பெரும்பான்மை வெற்றி பெற்ற திமுக ஆட்சியை கைப்பற்றிய நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் கோப்புகளில் கையெடுத்திட்டார். இதில் முதல்கட்டமாக மாநகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், மற்றும் ஆவின் பால் விலைகுறைப்பு ஆகிய திட்டங்கள் அமலுக்கு வந்தது.

Advertisment

இதனைத் தொடர்ந்து தேர்தல் வாக்குறுதியில் முக்கிய திட்டமான குடும்பதலைவிகளுக்கு ரூ1000 நிதி வழங்கும் திட்டம் எப்போது தொடங்கப்படும் என்ற கேள்வி எழுந்தது. இந்த கேள்விக்கு திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் ஒருசிலர் முதல்வர் உரிய நேரத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வைப்பார் என்று கூறியிருந்தனர். ஆனாலும் இத்திட்டம் குறித்து இதுவரை எந்த அதிகரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் தா.மோ. அன்பரசன், ​​ கடந்த ஆட்சியில் கஜானாவை காலி செய்துவிட்டு சென்றுவிட்டனர். அதனைச் சரி செய்யும் பணியில் முதல்வர் ஈடுபட்டுள்ளார்.  கஜானா சரி செய்யப்பட்டவுடன், இந்த 3 மாத உரிமை தொகை 1000 ரூபாய் வழங்கப்படும்" என்று கூறியிருந்தார். இதனால் மக்கள் அனைவரும் திட்டம் எப்போது தொடங்கப்படும் என்று காத்திருக்கினறனர்.

இந்நிலையில், தற்போது இத்திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்பது குறித்து தமிழக நிதியமைச்சர் பதிலளித்துள்ளார். இலவசங்கள், மானியங்கள் வளர்ச்சிக்கு உதவுமா அல்லது தடுக்குமா? என்ற தலைப்பில் ஏஷியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் சார்பில் நடத்த்பட்ட ஆன்லைன் கருத்தரங்கில் பேசிய தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில்,, ​​"விலையில்லா திட்டங்களை எதிர்ப்பவர்கள் கொரோனா தடுப்பூசி மற்றும் பரிசோதனையை இலவசமாக வழங்கும்போது மட்டும் அமைதியாக உள்ளனர். காரணம், இங்கு அனைவருக்குமான தேவைகள் மாறுபடுகின்றன.

அவைகளை நிறைவேற்ற வேண்டியது ஒரு நல்ல அரசின் கடமை. தனக்குத் தேவையில்லை என்பதற்காக மற்றவர்களுக்குப் பயன்படும் திட்டங்களை எல்லாம் எதிர்க்க கூடாது.. சமூக கட்டமைப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை ஒருசேர மேம்படுத்துவது அவசியம். அதற்கான பணிகளையே அரசு செய்து வருகிறது. மேலும் கல்வி மருத்துவம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளில்,  மற்ற மாநிலங்களை விட தமிழகம் முன்னிலையில் தான் உள்ளது.

போக்குவரத்து நெரிசல், பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணங்களை கருத்தில் கொண்டு மகளிருக்கான 50 சதவீத மானிய இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக அரசு பஸ்களில் அவர்களுக்கு இலவச பயண திட்டம் அமல்படுத்தப்பட்டது. குடும்ப பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் நிச்சயமாக செயல்படுத்தப்படும். அதற்கான தரவுகள் சேகரிக்கும் பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன..

கிராமப்புற பெண்கள் பலர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மிக்சி, கிரைண்டர் போன்ற பணிச்சுமையை குறைக்கும் உபகரணங்கள் கட்டாயம் தேவை. ஆனால், தமிழகத்தில் சில மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால் வாஷிங் மெஷின் போன்ற பொருட்களை வழங்க முடியாது. அதனால் ஒரு திட்டத்தை செயல்படுத்தும்போது யாரெல்லாம் பயனாளிகள் என்று அரசு கண்டறிய வேண்டும்.நலத்திட்டங்கள் தவறான புள்ளிவிவரங்களால் மக்களை முழுமையாக சென்றடைவதில்லை.

அந்த வகையில் இதற்கு முந்தைய ஆட்சியில் பயிர்கடன், நகைக்கடன் தள்ளுபடி போன்றவற்றில் தவறான தரவுகள் இடம்பெற்றுள்ளன... நலத்திட்டங்களை அமல்படுத்துவதற்கான தரவுகளை மத்திய அரசின் ஆதார் திட்டத்தில் இருந்து முழுமையாக பெற முடியாது.. ஆதாரில் கைரேகை உட்பட பல்வேறு போலி ஆவணங்கள் உள்ளன. .. தகவல் மேம்பாடு தான் நலத்திட்டங்களை முழுமைப்படுத்தும் என கூறியுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment