scorecardresearch

தமிழ்நாட்டில் முதன் முறை… பெண் காவலர்கள் குழந்தைகளுக்கான பாலூட்டும் அறை திறப்பு

திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பெண் போலீஸாருக்கான தாய்ப்பாலூட்டும் தனி அறை திறக்கப்பட்டது

தமிழ்நாட்டில் முதன் முறை… பெண் காவலர்கள் குழந்தைகளுக்கான பாலூட்டும் அறை திறப்பு

தமிழ்நாட்டில் முதன் முறையாக பெண் காவலர்கள் குழந்தைகளுக்கான பாலூட்டும் அறை திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் திறக்கப்பட்டது.

திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீஸாரின் குழந்தைகளுக்கான பாலூட்டும் தனி அறை தொடக்க விழா இன்று நடைபெற்றது. பெண்கள் நீண்ட தூரம் வெளியூருக்கு வாகனங்களில் செல்லும் போது, அவர்களுக்கு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வதால் அவர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி விடுகின்றனர்.

மேலும், பணி செல்லும் தாய்மார்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்கு போதுமான இடமில்லாமல் அவதிக்குள்ளாகின. இதன் காரணமாக கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அனைத்து பேருந்து நிலையங்களிலும் தாய்ப்பாலூட்டும் அறை திறக்கப்பட்டது. அந்த வகையில் திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பெண் போலீஸாருக்கான தாய்ப்பாலூட்டும் தனி அறையைக் கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சண்முகப்பிரியா திறந்து வைத்தார்.

இந்த அறையில் வீட்டில் குழந்தைகள் பயன்படுத்துவதைப் போலவே தலையணையுடன் கூடிய சிறிய மெத்தை, கொசு வலை, குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகள், குழந்தைகளுக்காக பழங்கள், காய்கறிகள், விளையாட்டு பொம்மைகள் மற்றும் விலங்குகளின் படங்களைக் கொண்ட சுவரொட்டிகள், பேனர்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.

மேலும், சுகாதார வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் டிஎஸ்பி ஜாபர் சித்திக் மற்றும் போலீஸார் உடனிருந்தனர்.

க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu first time women police feeding room in thiruvidai maruthur