Advertisment

சென்னைக்கு கடத்தப்படும் மாட்டு இறைச்சி : சோதனை செய்த அதிகாரிகள் அதிர்ச்சி

ஆம்பூர் பேருந்து நிலையத்துக்கு இரு சக்கர வாகனங்களில் கொண்டு வரப்படும் பெட்டிகள், இறைச்சி என்பது கண்டக்டருக்குத் தெரியாமல் சென்னை செல்லும் பேருந்துகளில் ஏற்றிவிடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Beef Meat

சென்னைக்கு மாட்டு இறைச்சி கடத்தல்

வெளியூர்களில் இருந்து சென்னைக்கு மாட்டிறைச்சி கடத்தப்படுவதாக சமூக வலைதளங்கன் மூலம் வந்த புகாரை தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் நேற்று (செப் 25) அதிகாலை சோதனை நடத்தினர்.

Advertisment

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய இந்த சோதனை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆம்பூர் பேருந்து நிலையத்துக்கு இரு சக்கர வாகனங்களில் கொண்டு வரப்படும் பெட்டிகள், இறைச்சி என்பது கண்டக்டருக்குத் தெரியாமல் சென்னை செல்லும் பேருந்துகளில் ஏற்றிவிடப்படுகிறது. மேலும் பார்சலில் இறைச்சி மடிவதைத் தடுக்க அட்டைப் பெட்டிகளில் மர பலகைள் வைத்து அடைக்கப்படுவதாக கூறப்பட்டது.

இதனிடையே ஆம்பூரில் இருந்து சென்னைக்கு பேருந்து வரும் ஐந்து மணி நேர பயணத்தின் போது இறைச்சி கெட்டுப்போனதால், பெட்டிகளில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியபோது இறைச்சி கடத்தப்படும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக அப்பகுதியில் இருக்கும் சிலர் கூறியுள்ளனர். அதே சமயம் "போக்குவரத்தில் ஈடுபட்டவர்கள் வழக்கமாகக் கூறும் சாக்கு, தங்களுக்கு வரும் ஆர்டர்களின் அடிப்படையில் தோல் பொருட்கள் சென்னைக்கு அனுப்பப்படுகின்றன"

ஆனால் "சென்னையில் இதுபோன்ற பழுதடைந்த இறைச்சி விற்கப்பட்டால், அது உடல்நலக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும் என்பதால், அதன் விளைவுகள் அதிகமாக இருக்கும்" என்றும் என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில்,

சமூகவலைதளங்களில் வெளியான பதிவுகள் மற்றும் அது தொடர்பான புகைப்படங்களைப் பார்த்து, ஆம்பூர் பேருந்து நிலையத்துக்குச் சோதனை நடத்த வந்தோம். ஆனால், சென்னை செல்லும் எந்தப் பேருந்திலும் பெட்டிகள் ஏற்றப்படவில்லை என்று கூறினர். தொடர்ந்து எப்படி அதிகாலை நேரத்தில் இவ்வளவு சீக்கிரமாக இந்த சம்பவம் நடந்தது என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்,  அவர்கள் அதிகாலை 5 மணிக்குள் மாடுகளை அறுப்பார்கள், எனவே சென்னைக்கு இறைச்சி என்றால் இயற்கையாகவே காலையில் பேருந்து நிலையத்திற்கு கொண்டு வரப்படும். இருப்பினும், சமூக வலைதளங்களில் வெளியானது உண்மையா என்பதை அறிய அடுத்த சில நாட்களில் கண்காணிப்பை தொடர திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

மூன்று மாதங்களுக்கு முன்பு இதேபோன்ற சென்னைக்கு நாய் இறைச்சி அனுப்பப்பட்டதாகக் கூறப்பட்டபோது, ​​அந்த அதிகாரி, “இது நாய் இறைச்சி அல்ல, மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி மட்டுமே, மேலும் நாட்றம்பள்ளியில் ஒரு தொழிலாளியால் இந்த பிரச்சினை எழுப்பப்பட்டது. ஊதியம் தொடர்பான பிரச்சினைகளுக்கு இது போன்ற ஒரு தகவலை பரப்பியதாக குறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment