கோவை வெள்ளியங்கிரி மலை ஏற்றத்துக்கான அனுமதி இன்றுடன் நிறைவு : இதுவரை 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பக்தர்கள் சென்று சுவாமியை தரிசனம் செய்துள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.
கோவை பூண்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் வெள்ளியங்கிரி மலை உள்ளது. இங்கு உள்ள 7"வது மலையில் சுயம்புலிங்கம் கோவில் உள்ளது. சுயம்புலிங்கத்தை தரிசிப்பதற்காக பக்தர்கள் மலையேற்றம் செய்வது வழக்கம். ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை மலை ஏற்றத்துக்கு வனத் துறையினர் அனுமதி அளிக்கின்றனர்.
இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி மாதம் 12"ந் தேதி முதல் மலையேற பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் மலையேறி வந்தனர். சிவராத்திரி சித்ரா பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்தனர். வெள்ளியங்கிரி மலை ஏற்றத்துக்கு வனத் துறையினர் அளித்த அனுமதி இன்றுடன் 31"ஆம் தேதி நிறைவுபெறுகிறது. அதன் பிறகு மலையேற பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
இதுதொடர்பாக கோவை மாவட்ட வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மலை உச்சியில் அருள்பாலிக்கும் வெள்ளியங்கிரி கோவிலுக்கு மலையேற்றம் செல்ல பக்தர்களுக்கு கடந்த பிப்ரவரி 15"ந் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டது. அங்கு இதுவரை 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாக சென்று சுவாமியை தரிசனம் செய்து விட்டு சென்று உள்ளனர்.
இதற்கு இடையே மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த பலத்த மழை காரணமாக அங்கு உள்ள 5"6"7"வது மலை உச்சியில் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது. மேலும் கோவிலுக்கு செல்லும் மலைப் பாதைகள் சேதம் அடைந்த நிலையில் உள்ளன. எனவே பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இன்றுடன் மே"31 முதல் வெள்ளியங்கிரி மலையேற்றம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
இருந்த போதிலும் அவர்களில் 94"சதவீதம் பேர் வைப்பு தொகையை திரும்ப பெற்று விட்டனர். வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்ட போது அங்கு சுமார் 6 டன் அளவில் பிளாஸ்டிக் பொருட்களும் ஈரத் துணிகளும் சேகரித்து அப்புறப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“