/tamil-ie/media/media_files/uploads/2021/12/Palaniyaappna.jpg)
Former ADMK Minister Palaniyappan Joined In DMK : அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் சென்னை அறிவாலையத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னணிலையில் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்தது முதல் அதிமுகவில் அதிகாரப்போட்டி விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர்கள் பலரும் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்து வருகின்றனர். இந்த படலத்தை முதலில் தொடங்கிவைத்த அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அவரைத்தொடர்ந்து தங்க தமிழ்ச்செல்வன், தோப்பு வெங்கடாச்சலம் உள்ளிட்ட பலர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.
தற்போது இந்த முன்னாள் அதிமுக அமைச்சர் பழனியப்பன் இணைந்துள்ளார். மாற்று கட்சியில் இருந்து திமுவிற்கு வந்த அமைச்சர்களை ஒன்றினைக்கும் நிகழ்ச்சி சென்னை அறிவாலையத்தில் இன்று நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தனது ஆதரவாளர்கள் சுமார் 2000 பேருடன் தர்மபுரியில் இருந்து வந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பன் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தாமதமாக வந்தாலும், சரியான நேரத்தில் திமுகவில் இணைந்துள்ளார். அவரே வந்துவிட்டார் இனி தர்மபுரியில் திமுக வீக் என்று சொல்ல முடியாது. சட்டசபையில் பழனியப்பன் உரையாற்றியதை ஆர்வமுடன் கேட்டிருக்கிறேன். திமுகவில் இணைய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தோம். அதன்படி தற்போது அவர் திமுகவில் இணைந்துள்ளார் என்று கூறியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியிருந்தாலும், கொங்கு மண்டலத்தில் திமுக சற்று தோல்வியையே சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.