என் முதுகில் குத்த இடமில்லை, தொண்டர்களுக்காக வருவேன்… சசிகலா மீண்டும் ஆடியோ பதிவு

VK Sasikala Speech To Admk Volunteer : அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ள விகே சசிகலா மீண்டும் அதிமுக தொண்டர் ஒருவருடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

தமிழகத்தில் அதிமுக கட்சியில் பரபரப்பான பல சிக்கல்கள் நாள்தோறும் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில், கடந்த சில வாரங்களாக அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜெயலலிதாவின் தோழி அதிமுக கட்சி நிர்வாகிகளிடம் பேசி வருவது அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா  தான் சிறை செல்வதற்கு முன் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியை அறிவித்துவிட்டு சென்றார். அப்போது முன்னாள் முதல்வராக இருந்த ஒ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தி கட்சியில் இணைந்த நிலையில், துணை முதல்வராகவும் அறிவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா இறந்த பிறகு பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற சசிகலா அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து கட்சியில் ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் இருந்து வருகின்றனர்.

சசிகலா சிறை சென்ற 4 வருடத்தில் இபிஎஸ் ஒபிஎஸ் இருவரும் கட்சியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்ட நிலையில், சிறையில் இருந்து விடுதலையாகி சென்னை திரும்பிய சசிகலா அதிமுகவை கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசியலில் இருந்து விலகுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டார். இதனால் அதிமுகவினர் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், ச்சிகலா ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து நடைபெற்ற சட்டசபை தேர்தலில், அதிமுக படுதோல்வியை சந்தித்த்து.

இந்நிலையில், அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த சசிகலா தற்போது அதிமுகவை கைப்பற்றும் நோக்கியில் அக்கட்சியின் நிர்வாகிகள் சிலருடன் தொலைபேசியில் உரையாடி வந்துள்ளார். கடந்த சில நாட்களாக இந்த உரையாடல் தொடர்பாக ஆடியோ வெளியாகி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், நேற்று நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சசிகலாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் அதிமுகவை சேர்ந்த எவரும் சசிகலாவுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் மீறினால் கட்சியை விட்டு நீக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து சசிகலாவுடன் தொடர்பில் இருந்த 15 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தற்போது சசிகலா மேலும் ஒரு அதிமுக தொண்டருடன் தொலைபேசியில் பேசிய ஆடியோ உரையாடல் வெளியாகியுள்ளது. தேனியை சேர்ந்த சிவனேசன் என்பருடன் தொலைபேசியில் பேசிய சசிகலா, முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் அவராகத்தாலன் பதவியில் இருந்து சென்றார் என்றும் இல்லை என்றால் அவரைத்தான் முதல்வராக அறிவித்திருப்பேன் என்றும் கூறியுள்ளார் மேலும் அவர் பேசுகையில், நான வருகிறேன் வந்து எல்லாரையும் சந்திக்கிறேன் என்று சொல்லிவிட்டோன்.

அவர்கள் நேற்று கட்சியில் இருந்து சிலரை நீக்கிவிட்டார்கள். ஆனாலும் என்னுடன் பலர் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். சிலரின் சுயநலத்திற்காக தொண்டர்களை பலிகடா ஆக்குவதா? என்னை நம்பியர்கள் எல்லாம் என்னை முதுகில் குத்திவிட்டார்கள். அப்போது என் முதுகில் குத்துவதற்கு இடமே இல்லை. அந்த அளவிற்கு செய்துவிட்டார்கள். ஆனால் தொண்டர்களையும் இப்படி செய்தால் நான் எப்படி பார்த்துக்கொண்டிருக்க முடியும்.

கஷ்டப்பட்ட காலத்தில் கட்சியை முன்னுக்கு கொண்டுவர அம்மா எவ்வளவு பாடுபட்டிருப்பார்கள், அவர்களுடன் இணைந்து நானும் எவ்வளவோ பாடு பட்டிருக்கிறேன். அப்படி இருக்கும்போது இதையெல்லாம் பார்த்துக்கொண்டு என்னால் எப்படி உட்கார்ந்திருக்க முடியும். கட்சியை காப்பாற்ற நான் உறுதியா வருவேன். வந்தே தீருவேன் அடிமட்ட தொண்டர்கள் தான் எனக்கு முக்கியம். அதற்கான நேரம் இப்போது வந்துவிட்டது. அதை நான் செய்தே தீருவேன் நிச்சயம் நல்லது நடக்கும் வலைப்படாதீர்கள் என்று கூறியுள்ளார்.  இந்த ஆடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu former aiadmk chief vk sasikala speech to admk volunteer again

Next Story
ஐடி வேலை வாய்ப்பு: ஸ்ரீதர் வேம்புவை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ்; கலகலக்கும் ட்விட்டர்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express