இப்படி துரோகம் செய்யலாமா? ஆறுகுட்டியுடன் அ.தி.மு.க பிரமுகர் வாக்குவாதம் ஆடியோ வைரல்

எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச் செயலாளர் எம்.ஆர்.நாகராஜன் ஆறுகுட்டியுடன் தொலைபேசியில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபடும் ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச் செயலாளர் எம்.ஆர்.நாகராஜன் ஆறுகுட்டியுடன் தொலைபேசியில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபடும் ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
இப்படி துரோகம் செய்யலாமா? ஆறுகுட்டியுடன் அ.தி.மு.க பிரமுகர் வாக்குவாதம் ஆடியோ வைரல்

அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி திமுகவில் இணைந்த நிலையில் அதிமுக நிர்வாகி ஒருவர் அவர் திமுக"வில் இணைந்து தொடர்பாக அவருடன் தொலைபேசியில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியின் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி நேற்று முன்தினம் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

அது தொடர்பாக அவர் போட்டியிட்ட கவுண்டம்பாளையம் தொகுதியை சேர்ந்த துடியலூர் பகுதி எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச் செயலாளர் எம்.ஆர்.நாகராஜன் ஆறுகுட்டியுடன் தொலைபேசியில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபடும் ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த ஆடியோவில் ஆறுகுட்டியைக் நீங்கள்  அதிமுகவிற்க்கு  துரோகம் செய்து விட்டதாக எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச் செயலாளர் எம்.ஆர்.நாகராஜன் கூறுகிறார்.

Advertisment
Advertisements

பதிலுக்கு ஆறுகுட்டி எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவிற்க்கு  துரோகம் செய்ததாக கூறுவதும் அந்த ஆடீயோவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த ஆடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.


எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச் செயலாளர் எம்.ஆர்.நாகராஜன் முன்னாள் எம்.எல்.ஏ.ஆறுகுட்டியுடன் பேசிய ஆடியோ

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: