/indian-express-tamil/media/media_files/2025/08/25/tamilnadu-nh-2025-08-25-23-00-37.jpg)
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சண்முகம், “திருமணம் செய்ய விரும்புவோர் கட்சித் தலைமையகத்திற்கு வரலாம், ஆணவக் கொலை தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என்ற கருத்து குறித்த கேள்விக்கு அண்ணாமலை, பதில் அளித்தார்.
இதில், பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்திற்கு யார் வேண்டுமானாலும் வரலாம். பலர் தஞ்சம் புகுந்து இருந்துள்ளனர். சட்டப்படி எது செய்ய இயலுமோ அதை செய்துள்ளோம். பெற்றோர்களை அழைத்து பேசியுள்ளோம், சில சமயங்களில் காவல்துறையின் உதவியையும் நாடியுள்ளோம். அதனால், பிற கட்சிகளின் அலுவலகத்திற்கு செல்வது போலவே, எங்கள் அலுவலகத்திற்கும் யாரும் வரலாம்,” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஜாதி என்பது புற்றுநோயைப் போல இந்து சமுதாயத்தில் பரவி வருகிறது. இதை முற்றிலும் ஒழிக்க வேண்டும். ஜாதி அடிப்படையில் நடைபெறும் ஆணவக் கொலைகளில் 18 வயதுக்கு குறைந்தவர்களும் ஈடுபட்டால், அவர்களை சிறுவர் (மைனர்) என்று கருதக்கூடாது; கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். மேல் ஜாதி – கீழ் ஜாதி என்ற மனப்பான்மையை வேரோடு ஒழிக்க வேண்டும். பள்ளி பாட புத்தகங்களில் ஜாதி ஒழிப்பு தொடர்பான பாடத்திட்டங்களும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் சேர்க்கப்பட வேண்டும்.
பள்ளிகளில் கைகளில் கயிறு கட்டுவது போன்ற பழக்கவழக்கங்கள் தடுக்கப்பட வேண்டும். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திமுக தான் தன்னுடைய அரசியல் எதிரி என்று கூறியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்துக்கும் திமுகக்கும் போட்டி என்று சொன்னால்தான் மக்கள் மதிப்பார்கள். கட்சி ஆரம்பிக்க வேண்டும், மாநாடு நடத்த வேண்டும் இவை அரசியல் தலைவர்கள் அனைவரும் கூறும் விஷயங்கள்.
2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய கூட்டணி வெற்றி பெற்று அரியணையில் அமரும். நண்பர் விஜய் அவர்கள் தனது கட்சியை வளர்க்க முயற்சித்து வருகிறார்கள். அவருக்கு வாழ்த்துக்கள். இன்னும் பல முயற்சிகள் செய்து கட்சியை வளர்க்க வேண்டும்,” என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.