மு.க.ஸ்டாலின் அரசு பெருந்தன்மை: இபிஎஸ்-க்கு அதே அரசு பங்களா அனுமதி

MK Stalin Vs Palanisamy : தமிழக எதிர்கடசி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் தங்க திமுக அரசு அனுமதி அளித்துள்ளது.

முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி, சென்னையில் உள்ள கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் வாடகை செலுத்தாமல் தொடர்ந்து தங்குவதற்கு திமுக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த 16 –வது சட்டசபை தேர்தலில், திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டு அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். இதனால் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர் பதவியில் இருந்த பலரும் அரசு இல்லாத்தை காலி செய்துவிட்ட நிலையில், தற்போது எதிர்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர் பதவிக்கு சமமான பொறுப்பில் இருப்பதால், தொடர்ந்து அதே இல்லத்தில் தங்குவதற்கு அனுமதி கேட்டு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து அதே இல்லத்தில் தங்குவதற்கு அனுமதி அளித்துள்ளார். கடந்த 2011 ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயல்லிதாவி அமைச்சரவையில் உறுப்பினரானதிலிருந்தே எடப்பாடி பழனிச்சாமி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள சேவந்தி என்ற பங்களாவில் தங்கியிருந்தார். “மாநில பொதுப்பணித்துறை ஒதுக்கீடு செய்த இந்த பங்களாவில், வாடகை எதுவும் நிர்ணையிக்கப்படவில்லை.

அதற்கு பதிலாக சட்டமன்ற உறுப்பினராக அவருக்கு வழங்கப்படும் வீட்டு வாடகை கொடுப்பனவை பெற முடியாது, என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது எதிர்க்கட்சித் தலைவராக அதே பங்களாவில் வசிக்க அனுமதிக்குமாறு கட்டட பிரிவு மற்றும் சென்னை பிராந்திய அலுவலகத்திற்கு துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், 20 க்கும் மேற்பட்ட முன்னாள் அதிமுக அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாக்களை காலி செய்தனர், மீதமுள்ளவர்கள், மற்றும் முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உட்பட ஒரு சிலர் சென்னையில் வாடகை வீட்டை தேடி வருவதாக கூறப்படுகிறது.

இதில் ஒ. பன்னீர்செல்வம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பைக் பார்த்துள்ளதாகவும், அவர் விரைவில் அங்கு குடியேறுவார் என்றும் கூறப்படுகிறது. அமைச்சர்கள் மற்றும் சட்டமன்றத்தின் முதன்மை அதிகாரிகள் (அரசு வீடுகளை நிறுவுதல் மற்றும் பராமரித்தல் மற்றும் வசதிகளை வழங்குதல்) விதிகள், 1977, பொது அமைச்சர்கள் காலி செய்ய எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை, அவர்களுக்கு இரண்டு மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த்து.

நியாயமான வாடகையை மீட்டெடுப்பதோடு கூடுதலாக சலுகை காலம் காலாவதியாகும்போது, ​​வீட்டை காலி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். “குறைந்த பட்சம், மூன்று முன்னாள் அமைச்சர்கள் இரண்டு மாதங்கள் தொடர்ந்து தங்குதற்காக அனுமதி கோரியதை தொடர்ந்து, அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது, முன்னாள் அமைச்சர்கள் பங்களாக்களை காலி செய்யும் வரை அவர்களை ‘தொந்தரவு செய்ய வேண்டாம்’ என்றும் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu former chief minister eps to stay on greenways home

Next Story
கொரோனாவால் உயிரிழந்த மகளின் துக்கம் தாளாமல் தற்கொலைக்கு முயன்ற தந்தை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express