கலைஞரின் நிழல் சண்முகநாதன் உடல்நிலை பாதிப்பு: உதயநிதி நேரில் ஆறுதல்

கடந்த சில தினங்களாக தீவிர உடல்நிலை பாதிப்பில் இருந்து வந்த சண்முகநாதன், தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். கருணாநிதியின் நிழலாக இருந்து வந்த சண்முகநாதனின் உடல்நிலை குறித்து அறிந்த உதயநிதி ஸ்டாலின், அவரை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க மருத்துவமனை விரைந்தார்.

கடந்த சில தினங்களாக தீவிர உடல்நிலை பாதிப்பில் இருந்து வந்த சண்முகநாதன், தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். கருணாநிதியின் நிழலாக இருந்து வந்த சண்முகநாதனின் உடல்நிலை குறித்து அறிந்த உதயநிதி ஸ்டாலின், அவரை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க மருத்துவமனை விரைந்தார்.

author-image
WebDesk
New Update
கலைஞரின் நிழல் சண்முகநாதன் உடல்நிலை பாதிப்பு: உதயநிதி நேரில் ஆறுதல்

Udhayanidhi Stalin Meets Sanmuganathan Karunanidhi PA News Tamil : மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் நிழல் என சிறப்பு பெற்ற சண்முகநாதன், உடல்நிலை கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

Advertisment

கருணாநிதியிடம் சுமார் 48 ஆண்டு காலம் உதவியாளராக பணியாற்றியவர் தான் சண்முகநாதன். தமிழக காவல்துறையில் சுருக்கெழுத்து நிருபராக தனது வாழ்க்கையை தொடங்கினார். எதிர்கட்சித் தலைவர்களின் மேடைப் பேச்சுகளை சுருக்கெழுத்தில் குறிப்பெடுத்து, பின் அதனை தட்டச்சு செய்து அரசுக்கு அனுப்புவது தான் சண்முகநாதனின் பணி. தமிழக முதல்வராக இருந்த அண்ணாவின் மறைவினைத் தொடர்ந்து, கருணாநிதி முதல்வாராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது, சொந்த காரணங்களுக்கு பணி விடுப்பில் இருந்த சண்முகநாதனுக்கு தமிழக அரசு சார்பில் தந்தி அனுப்பப்பட்டது. அப்போது, அவர் கருணாநிதியின் உதவியாளராக நியமிக்கப்பட்டிருந்தார். 1969-ம் ஆண்டு முதல் கலைஞர் வாழ்ந்த காலம் வரை அவருக்கு உதவியாளராக இருந்து வந்தவர் தான் சண்முகநாதன்.

‘பேராசிரியர் க.அன்பழகன், என் போன்றோரின் மேடைப் பேச்சுகளை நாங்கள் பேசிய ஒரு வார்த்தை கூட மாறாது, அரசுக்கு உளவுத்துறை மூலம் அனுப்பபட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை அறிந்த நான், சண்முகநாதனை பற்றி விசாரித்து வைத்தேன். அதற்கு பிறகாக, முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின், அவரை என் உதவியாளராக்கி கொண்டேன்’ என, கருணாநிதியே சண்முகநாதன் குறித்து பொது மேடை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். அந்த அளவுக்கு கருணாநிதிக்கு நெருக்கமாக இருந்து வந்தார் சண்முகநாதன். கருணாநிதியின் மறைவிற்கு பிறகு, மிகுந்த மன உலைச்சலில் இருந்து வந்த சண்முகநாதனுக்கு அவ்வப்போது உடல்நலக் கோளாறு ஏற்பட்டது.

publive-image

இந்த நிலையில், கடந்த சில தினங்களாக தீவிர உடல்நிலை பாதிப்பில் இருந்து வந்த சண்முகநாதன், தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். கருணாநிதியின் நிழலாக இருந்து வந்த சண்முகநாதனின் உடல்நிலை குறித்து அறிந்த உதயநிதி ஸ்டாலின், அவரை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க மருத்துவமனை விரைந்தார். மருத்துவமனையில் சண்முகநாதனிடம் நலம் விசாரித்த பின், ட்விட்டரில் உதயநிதி ஸ்டாலின் உருக்காமான பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

Advertisment
Advertisements

உதயநிதியின் ட்விட்டர் பதிவில், ‘முத்தமிழறிஞர் கலைஞரின் எண்ணங்களை உள்வாங்கி அவரது கண் அசைவுக்கு ஏற்ப காரியமாற்றியவர். கலைஞருடைய அரசியல் வாழ்வின் ஆவணம். சண்முகநாதன் மாமா அவர்களை மருத்துவமனையில் இன்று சந்தித்து நலம் விசாரித்தேன். எனது பணிகளை குறிப்பிட்டு நெகிழ்ச்சியோடு வாழ்த்திய மாமா அவர்களுக்கு அன்பும் நன்றியும்’; என தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Udhayanidhi Stalin Private Hospital M Karunanidhi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: