மனைவி பீலா வெங்கடேசன் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் கேளம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு காவல்துறையில் சிறப்பு டி.ஜி.பி.யாக பணியாற்றியவர் ராஜேஷ் தாஸ். பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக இவர் மீது வழக்கு பதிவு செய்ய்பபட்டது. இந்த வழக்கு விசாரணை முடிந்து ராஜேஷ் தாஸ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு 3 ஆண்டுகள், சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்த நிலையில், தண்டனையை எதிர்த்து ராஜேஷ் தாஸ் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனுவை விவாரித்த நீதிமன்றம், ராஜேஷ்தாஸை கைது செய்ய இடைக்கால தடை விதித்திருந்த நிலையில், ராஜேஷ்தாஸ் மீது பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டவுடன் அவரது மனைவி பீலா அவரை விட்டு பிரிந்தார்.
தமிழகத்தின் எரிசக்தித்துறை செயலாளராக இருக்கும், பீலா ராஜேஷ் தனது கணவர் ராஜேஷ் தாஸை பிரிந்தவுடன், தனது பெயருடன் தனது தந்தையின் பெயரான வெங்கடேசன் என்ற பெயரை இணைந்துக்கொண்டார். இதனிடையே இருவரும் ஒன்றாக இருந்தபோது வாங்கிய தையூர் பங்களா வீடு தற்போது பீலா வெங்கடேசன் கட்டுப்பாட்டில் உள்ளதால், இந்த வீட்டிற்கு தனியாக ஒரு காவலாளியை நியமித்திருந்தார்.
இதனிடையே கடந்த 18-ந் தேதி தையூர் பங்களாவுக்கு வந்த ராஜேஸ் தாதஸ் காவலாளியை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து பீலா வெங்கடேசன், கேளம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் முன்னாள் டி.ஜி.பி ராஜேஷ்தாஸ் உட்பட 10 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த கேளம்பாக்கம் போலீசார், சென்னை பனையூரில் உள்ள ராஜேஷ்தாஸின் வீட்டில் வைத்து அவரை கைது செய்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“