Advertisment

ராஜேந்திர பாலாஜி குடும்பத்தினரை இடையூறு செய்யக்கூடாது: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

Tamilnadu News Update : குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை தேவைப்பட்டால் முறையாக சம்மன் அனுப்பி விசாரணை செய்துகொள்ளுங்கள் என உத்தரவிடப்பட்டுள்ளது

author-image
WebDesk
New Update
அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு; வீடியோ குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

Tamilnadu News About Former Minister Rajendra Balaji : குற்றம் சாட்டப்பட்டவர்களை எப்படி வேண்டுமானாலும் விசாரணை செய்யுங்கள் ஆனால் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை பரிந்துரை செய்துள்ளது.

Advertisment

விருநகர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,  தான் பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது, ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக எழுத்த புகாரை தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இருந்து முன்ஜாமீன் கேட்டு ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் அவரை கைது செய்ய உத்தரவி்ட்டது.

ஆனால் கைதுக்கு பயந்து தற்போது முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமறைவாகிவிட்ட நிலையில், அவரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்ய காவலதுறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள நிலையில், அவரது வீடு மற்றும் உறவினர்களிடம் ராஜேந்திரபாலாஜி குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உறிவினர் லட்சுமி என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாககல் செய்துள்ள மனுவில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சகோதரி நான். எனது மகன் வசந்தகுமார், ரமணா, மற்றும் ஓட்டுநர் ராஜ்குமார் ஆகியோரை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதுள்ள வழக்கு தொடர்பாக விசாரணை செய்ய கடந்த 17-ந் தேதி விருதுநகர் மாவட்டம் திருத்தங்கள் காவல்  நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.

காவல் நிலையத்திறகு சென்ற எங்களை மாவட்ட காவல் கண்கானிப்பாளர் அவர்கள் முன்னிலையிலேயே எங்களை துன்புறுத்தினர் இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகரிக்களுக்கு நாங்கள் புகார் மனு அளித்தோம். விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட மூவரிடமும் காவல்துறையினர் கையெப்பம் பெற்றுள்ளனர். எனவே முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உறவினர் என்பதற்காக என்னையும் எனது மகன்கள் மற்றும் ஓட்டுநர் ஆகியோரை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக்கூடாது என்று காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

அவசர வழக்காக இன்று இநத மனு விசாரணகை்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சுமத்தப்பட்ட அரசியல் ரீதியான குற்றச்சாட்டு இது. அதில் விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் குடும்ப உறுப்பினர்களை மிகவும் தொந்தரவு செய்கின்றனர். எனவே காவல்முறையிக் சட்டவிரோத செயல்களில் இருந்து குடும்ப உறுப்பினர்களை பாதுகாக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை எப்போது வேண்டுமானாலும் தேடி கைது செய்யுங்கள் விசாரணை செய்யுங்கள். ஆனால் அவர்களிள் குடும்ப உறுப்பினர்களை தொந்தரவு செய்யக்கூடாது. அவர்களிடம் விசாரணை தேவைப்பட்டால் முறையாக சம்மன் அனுப்பி விசாரணை செய்துகொள்ளுங்கள் என்று உத்தரவிட்ட நீதிபதி இந்த வழக்கை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்துள்ளார்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Madurai High Court Rajendra Balaji
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment