Aiadmk Former Minister Son Arrested For Goondas Act : தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற சம்பவங்களி்ல் ஈடுபட்ட முன்னாள் அமைச்சரின் மகன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.டி. செல்லப்பாண்டியன். இவரது மகன் ஞானராஜ் செபாசிங் (39) கடந்த நவம்பர் மாதம் 26-ந தேதி முத்திரி பருப்பு ஏற்றிச்சென்ற கண்டெய்னர் லாரி டிரைவரை தாக்கிவிட்டு 1.2 கோடி மதிப்பிலான முத்திரி பருப்பை கொள்ளையடித்தது மட்டுமல்லாமல், டிரைவரை கடத்திச்சென்றுள்ளனர். 7 பேர் தொடர்புடைய இந்த சம்பத்தில் ஞானராஜ் முக்கிய புள்ளியாக செயல்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இருந்து ஜப்பானின் டோக்கியோ நகருக்கு அனுப்புவதற்காக முத்திரிப்பருப்பு ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி துறைமுகம் நோக்கி புறப்பட்ட ஒரு கண்டெய்னரை இடையில் திருநெல்வேல தூத்துக்குடி நெடுஞ்சாலையில், புதுக்கோட்டை அருகே வழிமறித்த 7 பேர் கொண்ட கும்பல் டிரைவரை தாக்கிவிட்டு கண்டெய்னரின் நம்பர் பிளேட்டை மாற்றிவிட்டு கத்திச்சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே இந்த கும்பலை சுற்றிவலைத்த போலீசார் 16.5 டன் முத்திரிடன் கண்டெய்னர் லாரியை மடக்கி பிடித்தனர். இது தொடர்பாக புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் ரமேஷ் கொடுத்த தகவலின் அடிப்படையில் புதுக்கோட்டை வந்த தூத்துக்குடி மாவட்ட காவல கண்கானிப்பாளர் ஜெயக்குமார், ஞானராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
இந்த பரி்ந்துரையை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், செந்தில்ராஜ், ஞானராஜை குண்டனர் சட்டத்தில் கைது செய்ய நேற்று உத்தரவு பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஞானராஜ் பாலையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சரின் மகன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil