Advertisment

வெங்கடாச்சலம் மரணம் தற்கொலையா? கொலையா? அதிமுக சந்தேகம்

Tamilnadu News : பதவி நீடிப்பு வழங்குவதாக வாய்மொழி உத்தரவாதம் வழங்கியதாகவும், அப்படி தரவில்லை என்றால் வழக்கு தொடருவோம் என்றும் அவர் கூறினார்.

author-image
WebDesk
New Update
வெங்கடாச்சலம் மரணம் தற்கொலையா? கொலையா? அதிமுக சந்தேகம்

Tamilnadu News Update : முன்னாள் மாசுகட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாச்சலம் வேளச்சேரியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில், தற்போது அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இந்நிலையில், வெங்கடாச்சலத்திற்கு திமுக அரசு கொடுத்த நெருக்கடியே அவரது தற்கொலைக்கு காரணம் என்று அதிமுக சட்ட ஆலோசனை குழு உறுப்பினர் பாபுமுருகவேல் கூறியுள்ளார். இது தொடர்பாக அதிமுக தேர்தல் பணிக்குழு துணை செயலாளர் இன்பதுரை மற்றும் சட்ட ஆலோசனை குழு உறுப்பினர் பாபுமுருகவேல் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர் கூறுகையில், கடந்த 2018-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டி அளித்த தீர்ப்பின்படி மாசுக்கட்டுப்பாட்டு வரியத்திற்கு தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டு அவர் 3 வருடம பணியில் இருக்க வேண்டும் என்பது விதி. அதன்படி 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போது இருந்து அதிமுக அரசு இவரை மாசுக்கட்டுப்பாட்டு வரிய தலைவராக நியமித்தது. உச்ச நீதிமன்றத்தில் வழிகாட்டுதலின்படி தான் அவரது நியமனம் நடைபெற்றது. அப்போது ஒரு வருடம் மட்டுமே அவரை நியமனம் செய்தார்கள்.

அப்போது அவர் உச்சநீதிமன்ற விதிப்படி தனக்கு 3 வருட நியமனம் வழங்க வேண்டும் என்று கூறினார். அதன்படி 2020- செப்டம்பர் மாதம், அதிமுக அரசு அவரது பதவியை நீடித்து புதிய உத்தரவை வெளியிட்டது. அதன்படி 2021 செப்டம்பர் 26- வரை அவரது பதவிக்காலம் நீடிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்தது முதல் திமுக அரசு வெங்கடாச்சலத்திடம் பதவியை ராஜினாமா செய்யுமாறு நெருக்கடி கொடுத்துள்ளது.

ஆனால் அவர் உச்சநீதிமன்ற விதியின் படி 3 வருடங்கள் பதவியில் இருக்கலாம் என்றும் இதனால் தனக்கு பதவி நீடிப்பு வேண்டும் என்று கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் எனது சீனியர் வழக்கறிஞரிடம் பேசும்போது நான் அருகில் இருந்தேன். அப்போது திமுக அரசு பதவி சீடிப்பு வழங்கவில்லை என்றால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தார்.

இந்த வேளையில் அவருக்கு பதவி நீடிப்பு கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனர். ஆனால் பதவி நீடிப்பு வழங்குவதாக வாய்மொழி உத்தரவாதம் வழங்கியதாகவும், அப்படி தரவில்லை என்றால் வழக்கு தொடருவோம் என்றும் அவர் கூறினார். ஆனால் அவரக்கு பதவி நீடிப்பு வழங்காமல அவரது வீட்டில் வருமான வரி சொதனை நடத்தப்பட்டது. அவர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்று கூறியதால் அவரது வீட்டில் ரெய்டு நடைபெற்றது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், நேற்று அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று செய்தி வெளியானது. ஆனால் அது கொலையா அல்லது தற்கொலையா என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது. ஒரு ஐஎஃப்எஸ் ஆபீசர் ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும். அந்த சூழ்நிலை அவருக்கு ஏன் வருகிறது. அவர் நன்கு சட்டம் தெரிந்தவர், சட்டத்தின் மூலமாக போராடும் வல்லமை பெற்றவர். கோவிட் வழிமுறைகள் உட்பட சில சட்டங்களையே வகுத்துள்ளார். சட்டம் தெரிந்தவர் ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்று ஒரே ஆச்சரியம்.

திமுக ஆட்சிக்கு வரும்போதேல்லாம் ஒரு மர்மமான மரணம் நடந்துகொண்டே இருக்கிறது. அண்ணா நகர் ரமேஷ், சாதிக் பாட்சா, வரிசையில் இப்போது வெங்கடாச்சலம் மரணமும் இணைந்துள்ளது. அவரது நியமனம் சட்டப்பூர்வமானது. அவருக்கு பதவி நீடிப்பு வழங்கவேண்டியது சட்டப்பூர்வமானது. அதன்படிதான் நடந்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்யாமல் அவரது வீட்டில் ரெய்டு நடக்கிறது. அதனை அவர் எதிர்கொண்டு வந்திருக்கலாம். ஆனால் அவர் தற்கொலை செய்துகொள்ள வேண்டிய அவசியம் என்ன என்று பார்க்கும்போது திமுக அரசு தன்னை எதிர்க்கின்ற அரசியல்வாதிகள் அதிகாரிகள் மீது அடக்குமறையை பயன்படுத்துகிறது. இதற்கு வருமானவரிதுறையை ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்கள்.

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா அல்லது மிரட்டலின் ஆட்சி நடக்கிறதா என்று அறிவிக்கப்படாத ஒரு எமர்ஜென்சி தற்போது நிலவி வருகிறது. இதனால் வெங்கடாச்சலம் வீட்டிடை சுற்றி ரகசிய போலீசார் சுற்றி வருகினறனர். அவரது குடும்பத்தினர் புகார் கொடுக்க அஞ்சுகின்றனர். அவர்கள் மிரட்டப்படுகிறார்கள் என்று கேள்விப்படுகிறேன். ஒரு வழக்கறிஞரான இந்த குற்றங்களை பற்றி நன்கு தெரிந்தவன். இந்த வழக்கில் குற்றவாளி விஜிலன்ஸ். குற்றவாளியே அரசாங்கம் என்றால் இந்த தமிழ் நாடு அரசாங்கம் நடத்துகிற விசாரணை நியாயமாக இருக்காது.

எனவே நாங்கள் நீதிமன்றத்தை நாடி சிபிஐ விசாரணையை கேட்போம். இந்த மரணம் சந்தேக மரணம். அதற்கு பொறுப்பு இந்த அரசாங்கம். அதிகாரிகள் அச்சுறுத்தப்படுகிறார்கள். இதனால் நீதி விசாரணை வேண்டி நீதிமன்றம் செல்வோம். இந்த நீதியை நீதிமன்றம் நிச்சயம் தரும் என்று கூறியுள்ளார்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment