கொரோனா: 22 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 50க்கும் கீழ் குறைந்தது

தற்போது தமிழகத்தில் 31,819 பேர் தொற்று பாதிப்புக்கு சிகிக்சை பெற்று வருகின்றனர்.

chennai corona

தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. திங்கட்கிழமை புதிதாக 2,652 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் 36 பேர் உயிரிழந்தனர். இதுவரை கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 25.21 லட்சமாகவும், இறப்பு எண்ணிக்கை 33,454 ஆகவும் உள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து ஒரே நாளில் 3,104 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தற்போது தமிழகத்தில் 31,819 பேர் தொற்று பாதிப்புக்கு சிகிக்சை பெற்று வருகின்றனர்.

அனைத்து மாவட்டங்களிலும் தினசரி பாதிப்பு 300க்கும் குறைவாக உள்ளது. அதிலும் 8 மாவட்டங்களில் மட்டுமே 3 இலக்க எண்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 22 மாவட்டங்களில் 50க்கும் குறைவானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோயம்புத்தூரில் 290பேருக்கும், ஈரோடு மாவட்டத்தில் 193பேருக்கும், தஞ்சாவூரில் 191பேருக்கும், பெரம்பலூரில் 12பேருக்கும், திருநெல்வேலியில் 16பேருக்கும், தென்காசியில் 17பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 165 பேருக்கும், திருச்சியில் 103 மற்றும் மதுரையில் 33பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 6 பேரும், தஞ்சாவூரில் 4பேரும், கன்னியாகுமரியில் 4 பேரும், திருவள்ளூரில் 3பேரும்,திருச்சியில்2 பேரும் கொரோனாவால் உயிரிழந்தனர். தமிழகத்தின் 20 மாவட்டங்களில் உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை.

தொற்று குறைந்து வருவதால் கறுப்பு பூஞ்சை பாதிப்பும் குறைந்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் 3,929 பேர் கறுப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொற்று பாதிப்பு ஏற்பட்டவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் குணமடைந்ததாகவும், தொற்று காரணமாக 122 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu fresh corona cases falls

Next Story
Tamil News Highlights : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,505 பேருக்கு கொரோனா; 48 பேர் உயிரிழப்புStudy links milder covid 19 to prior encounters with similar less virulent coronaviruses Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express