நீண்ட நேரம் ஆன்லைன் விளையாட்டு : பெற்றோர் திட்டியதால் மாணவன் தற்கொலை

Tamilnadu News Update : பெற்றோர் திட்டியதால் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செல்போனில் கேம் விளையாடிய மாணவன் பெற்றோர்கள் திட்டியதால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே மன்னார்புரம் பகுதியை சேர்ந்தவர் வள்ளிமயில். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில், மூத்த மகன் சஞ்சய் அப்பகுதியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம்ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், செல்போனில் கேம் விளையாடுவதில் ஆர்வம் கொண்ட சஞ்சய் ஒரு நாளில் பல மணி நேரம் செல்போனில் பிரீ பயர் கேம் விளையாடியுள்ளார். இதனை பார்த்த பெற்றோர்கள் பலமுறை மகனை கண்டித்துள்ளனர். ஆனாலும் சஞ்சய் தனது முழு கவனத்தையும் கேமில் செலுத்தியுள்ளார். இதனால் பொறுமை இழந்த பெற்றோர்கள் செல்போனை பிடுங்கி வைத்துக்கொண்டு படிப்பில் கவனம் செலுத்துமாறு மகனிடம் கூறியுள்ளனர்.  

பெற்றோர்கள் செல்போனை பிடுங்கி வைத்துக்கொண்தால் மனமுடைந்த சஞ்சய் வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வெளியில் சென்ற பெற்றோர் வீட்டிற்கு திரும்பும்போது சஞ்சய் தற்கொலை செய்துகொண்டது தெரிந்து அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பெருகி வரும் விஞ்ஞான வளர்ச்சியில் பலரும் செல்போனுக்கு அடிமையாகிக்கொண்டு வரும் நிலையில், படிக்கும் மாணவர்களுக்கு இது தொடர்பாக கவுன்சிலிங் கொடுத்து அவர்களை நல்வழிப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று பல தரப்பினரிடமிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu game addicted student committed suicide in tirunelveli

Next Story
3-ஆகப் பிரியும் சென்னை போலீஸ்: கமிஷனர் பதவிகளுக்கு சீனியர் ஐபிஎஸ்-கள் கடும் போட்டிGreater Chennai Police commissioner office, Greater Chennai Police commissioner office devided into three, new police commissoner race going, shankar jiwal, 3-ஆகப் பிரியும் சென்னை போலீஸ், கமிஷனர் பதவிகளுக்கு சீனியர் ஐபிஎஸ்-கள் கடும் போட்டி, chennai police, tambaram, avadi, ips officers, new police commissioner posts
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express

X