அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் முக்கியப் பொருளாக பூண்டு உள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்கள் பூண்டு உற்பத்தியில் முன்னணியில் உள்ளன.
2/5
இந்நிலையில் தமிழ்நாட்டில் இப்போது வெங்காயம், பூண்டு உள்ளிட்ட காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, பூண்டு விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது.
3/5
ஓமலூர் சந்தையில் பூண்டு வரத்து குறைந்துள்ள நிலையில், இன்று ஒரு கிலோ பூண்டு விலை ரூ. 450 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்து பூண்டு லோடு இந்த சந்தைக்கு கொண்டுவரப்படுகிறது. அந்த மாநிலங்களில் பூண்டு விளைச்சல் தற்போது குறைந்துள்ளதால் சந்தைக்கு பூண்டு வரத்து குறைந்தது. அதன் எதிரொலியாக பூண்டு விலை கடுமையாக் அதிகரித்துள்ளது.
Advertisment
4/5
வழக்கமாக ஓமலூர் சந்தைக்கு 100 டன் அளவுக்கு பூண்டு லோடு வரும் நிலையில் தற்போது 20 டன் அளவுக்கு மட்டுமே வந்துள்ளது. இதனால் வரும் நாட்களில் பூண்டு விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5/5
ஒரு கிலோ நீலகிரி பூண்டு ரூ.350 முதல் ரூ.500 வரை விற்பனையாகிறது.