முன்னாள் பிரதமர் ராஜீகாந்தி கொலை வழக்கில், நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழகத்தில் பல அமைப்புகள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இந்த 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே பரிந்துரை செய்தது. ஆனால் இது குறித்து தமிழக ஆளுநர் எவ்வித முடிவும் எடுக்காமல் உள்ளார்.
மேலும் கடந்த 2018ல் இந்த வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை சார்பில் தீர்மானம் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு கனர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் தாமதிப்பதால், இந்த விவகராம் மத்திய அரசிடம் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் இதில் எந்த முடிவும் அறிவிக்காத மத்திய அரசு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய தமிழக ஆளுநர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் தன்னை விடுவிக்க வேண்டும் என்று, பேரறிவாளன் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் மத்திய அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க ஜனாதிபதிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இதில் ஆளுநர் முடிவெடுக்க எதுவும் இல்லை என கூறப்பட்டது. ஆனால் இன்று திடீர் திருப்பமாக தனது நிலைபாட்டை மாற்றிய மத்திய அரசு ‛ஜனாதிபதிக்குப் பதிலாக மாநில கவர்னரே முடிவு செய்வார் என்று தெரிவித்தது.'
இதனையடுத்து வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை விடுவிப்பதில் கவர்னர் இன்னும் 3 நாட்களில் முடிவு எடுப்பார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் அவர்களை விடுதலை செய்ய கவர்னருக்கு உடன்பாடு இல்லை எனில் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு கோப்புகளை திருப்பி அனுப்பலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"