scorecardresearch

தமிழகத்தில் மேலும் 2 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி: மொத்தம் 11,575 எம்.பி.பி.எஸ் ‘சீட்’கள்

தமிழகத்தில் மேலும் 2 தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ள நிலையில் மொத்த கல்லூரிகளின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.

MBBS
மருத்துவ படிப்புகள்

தமிழகத்தில் நந்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மற்றும் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ அறிவியல் மற்றும் மருத்துவமனை ஆகிய 2 தனியார் மருத்துவ கல்லூரிகளில் தலா 150 மருத்துவ இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்திற்கு கூடுதலாக 350 இளநிலை மருத்துவ இடங்கள் கிடைத்துள்ளது. மொத்த எம்.பி.பி.எஸ் இடங்களின் எண்ணிக்கை 11,575 ஆக உயர்ந்துள்ளது. அதே போல் மாநிலத்தில் மொத்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையும் 74 ஆக உயர்ந்துள்ளது.

டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஈரோட்டில் உள்ள நந்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 150 இடங்களுடன் முதலாம் ஆண்டு சேர்க்கை தொடங்க ஆணையம் அனுமதி அளித்துள்ளது. ஈரோட்டில் இருந்து 6 கி.மீ தொலைவில் பிச்சாண்டம்பாளையத்தில் அமைந்துள்ள கல்லூரி அரசு ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான இடங்களை மாநிலத் தேர்வுக் குழுவுடன் பகிர்ந்து கொள்ளும். அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் வரும் 150 இடங்களுக்கும் நீட்-2023 மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் – தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகச் சட்டம் 2019ன் கீழ் நிறுவப்பட்டு, 2021 ஆம் ஆண்டில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கான சேர்க்கையைத் தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ அறிவியல் மற்றும் மருத்துவமனையில் 150 எம்பிபிஎஸ் இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தனலட்சுமி சீனிவாசன் அறக்கட்டளை மூலம் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது.

தேசிய மருத்துவ ஆணைய அறிவிப்பில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளோ, தற்போதுள்ள கல்லூரிகளுக்கான இடங்கள் அதிகரிக்கப்படுவதாகவே எந்த தகவலும் இல்லை. எய்ம்ஸ்-மதுரை உட்பட 38 அரசு அரசு நடத்தும் மருத்துவ கல்லூரிகளில் 5275 இடங்கள் உள்ளன.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் அமைக்க அரசு திட்டமிட்டு அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu gets 2 more medical colleges

Best of Express