செப்டம்பர் 17-ந் தேதி மிலாடி கொண்டாடப்படும் என்று தலைமை காஜி அறிவித்துள்ள நிலையில், அன்றைய தினம் அரசு விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களின் இறைதூரதான முகமது நபியின் பிறந்த நாளை மிலாடி நபி என்ற பெயரில் கொண்டாடபடுகிறது. ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் கொண்டாடப்படும் இந்த பண்டிகையில் இஸ்லாமியர்கள் புனித நூலான குர்ரான வாசிப்பது முக்கியமான கடமையாக செய்வார்கள். மேலும் இந்த நாளில் புத்தாடை உடுத்தி உறவினர்களிடம் அன்பையும் பரிமாறிக்கொள்வார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டு, செப்டம்பர் 16-ந் தேதி மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படுவதாக இருந்தது. இந்த நாளில் அரசு விடுமுறை அறிவித்து தமிழக அரசின் சார்பில் அரசாணையும் வெளியிடப்பட்டது. ஆனால், ரபி உல் அவ்வல் மாத பிறை கடந்த 4-ந் தேதி தெரியாதால், செப்டம்பர் 17-ந் தேதி மிலாடி நபி கொண்டாடப்படும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசிடம் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து அரசின் சார்பில் செப்டம்பர் 17-ந் தேதி அரசு அலுவலகங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முன்பு செப்டம்பர் 16-ந் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 17-ந் தேதி அரசு விடுமுறை என்று மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தலைமை செயலாளர் நா.முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்கள் அனைத்திற்கும் இந்த விடுமுறை பொருந்தும் என்று அறிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“