/tamil-ie/media/media_files/uploads/2021/09/Thalikku-thanga.jpg)
Tamilnadu News Update : தமிழக அரசின் சமூக நலதுறை சார்பாக மகளிருக்கான திருமண உதவித்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பட்டாதாரி பெண்ணுக்கு திருமணத்தின் போது 8 கிராம் தங்கமும், ரூ50 ஆயிரம் ரொக்கப்பணமும், பட்டதாரி அல்லாத பெண்ணுக்கு திருமணத்தின் போது 8 கிராம் தங்கமும் ரூ 25 ஆயிரம் ரொக்கபணமும் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் தமிழகத்தில் அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவி திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு ஏழைப்பெண்கள் திருமண நிதி உதவி திட்டம், ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணம் நிதியுதவி திட்டம் என தமிழகத்தில் பெண்கள் திருமணத்திற்கான 5 நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் தாலிக்கு தங்கம் என்ற திட்டத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெற வேண்டி தமிழக அரசு தற்போது புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
திருமண நிதியுதவி மற்றும் தங்க நாணயம் கோரி விண்ணப்பிப்போரின் வீட்டில் யாரும் அரசுப்பணியில் இருக்க கூடாது.
திருமண நிதியுதவி திட்டத்தில் விண்ணப்பிக்கும்போது இதற்கு முன்பு எந்த ஒரு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் பயன்பெற்றிருக்க கூடாது.
திருமண நிதியுதவிக்கு விண்ணப்பிப்போரின் வீட்டில் நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்க கூடாது மற்றும் மாடி வீடாக இருக்க கூடாது.
விண்ணப்பிப்போரின் ஆண்டு வருமானம் ரூ 72 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.
திருமண மண்டபங்களில், நடந்த திருமணங்களுக்கு உதவித்தொகை கேட்டு விண்ணப்பிந்திருந்தால் அந்த மனு நிராகரிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.