Tamilnadu Government Announced Pongal Gift For Ration card Holders : தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகைக்கு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் தை முதல்நாள் (ஜனவரி மாதம்) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகைக்கு அரசு சார்பில் மக்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பரிசுப்பொருட்கள் குறித்து தமிழக அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர் திருநாளாம் தைப் பொங்கல்
இத்தொகுப்பில், பொங்கலுக்குத் தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை (20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு) 2,15,48,060 குடும்பங்களுக்கு, மொத்தம் ஆயிரத்து 88 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில், இப்போதே பரிசுப்பொருட்கள் குறித்து அறிவிப்பு வெளியிட்டது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், கடந்த அதிமுக ஆட்சியில், பரிசுப்பொருட்களுடன் ரூ 2500 ரொக்கப்பணம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் ரொக்கப்பணம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் பொதுக்கள் சற்று அதிருப்தியடைந்துள்ளனர். ஆனால் கடந்த ஆட்சியில் கொடுத்ததை விட தற்போது பரிசுப்பொருட்கள் அதிகமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil