ஆன்லைனில் அப்ளை பண்ணுங்க; 3 நாளில் கட்டிட அனுமதி: தமிழக அரசு அதிரடி உத்தரவு

Tamilnadu Government building plan approval by online Tamil News தகுதி வாய்ந்த தொழில் சார்ந்த வல்லுநர் பதிவுக்கான விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக மட்டுமே பெற்றுப் பதிவுச் சான்று வழங்க வேண்டும்.

Tamilnadu Government announcement for building plan approval by online Tamil News
Tamilnadu Government announcement for building plan approval by online Tamil News

Tamilnadu Government announcement for building plan approval by online Tamil News : நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இணையதளம் மூலம் இனி கட்டிட அனுமதி அளிக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக விரிவான வழிகாட்டி நெறிமுறைகளையும் தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில், பொதுமக்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் சரியாக இருந்தால், 3 நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா அனைத்து மாநகராட்சி, நகராட்சி, மண்டல இயக்குநர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் உள்ளக் குறிப்புக்கள் இங்கே…

“ஒன்றிய, மாநில அரசின் கொள்கை முடிவுகளின்படி கட்டிட அனுமதி வழங்கும் நடைமுறையை எளிமைப்படுத்தவும், கட்டிட விண்ணப்பங்களின் மீது இறுதி முடிவு எடுத்துக்கொள்ளும் பரிசீலனைக்கான கால அளவினை குறைக்கவும், பொதுமக்கள் கட்டிட விண்ணப்பங்களையும், ஆவணங்களையும், உரிமம் கட்டணங்களையும் தங்களது இருப்பிடத்திலிருந்தே இணையதளம் வாயிலாக செலுத்திட மென்பொருள் உருவாக்கப்பட்டு அனைத்து பணிகளும் இணையதளம் வாயிலாக மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.

தொழில்சார்ந்த வல்லுநர்களைத் தகுதியின் அடிப்படையில் பதிவு செய்து கட்டணங்கள் வசூலித்தல், பதிவு சான்று அளித்தல், ஒவ்வொரு ஆண்டும் புது நிலைப்படுத்தி ஏப்ரல் மாதத்தில் மன்றத்தின் பார்வைக்காக வைத்து மற்றும் இணையதளத்தில் பதிவிடுதல் மற்றும் தவறு செய்யும் தொழில் சார்ந்த வல்லுநர்களின் உரிமம் ரத்து செய்வது குறித்தான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக முழு விவரங்களும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கட்டண விகிதங்கள் பொறுத்தவரையில், மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் திட்ட மற்றும் கட்டிட அனுமதி உத்தரவுகளை விரைந்து வழங்கிடும் வகையில் தானியங்கி மென்பொருள் வாயிலாகக் கட்டண விகிதங்களைக் கணக்கீடு செய்து இணையதளம் மூலம் வசூலிக்க மென்பொருளில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சிறிய குடியிருப்பு கட்டிடங்கள் கட்டும் பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கும் விதமாக 1200 சதுர பரப்பளவிலான குடியிருப்பு கட்டிடங்களுக்குக் கள ஆய்வின்றி 10 நாட்களுக்குள்ளாக அனுமதி வழங்கப்படும் என்றும் அலுவலர்கள் தவறும் நிலையில் ஒப்புதலளிக்கப்பட்டதாகக் கருதி கட்டணங்கள் கணக்கீடு செய்யும் நிலைக்கு மாற்றப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பத்தாயிரம் சதுரடி பரப்பளவு வரைவு திட்ட அனுமதி வழங்கிட உள்ளாட்சிகளுக்கு அதிகார பகிர்வு வழங்கப்பட்டுள்ளது.

இணையதளம் வாயிலாகக் கட்டிட அனுமதி மற்றும் திட்ட அனுமதியினை உரியக் காலத்திற்குள் சீரிய முறையில் வழங்கிட மாநகராட்சி, நகராட்சிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் அதில் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, கட்டிட விண்ணப்பங்கள் மற்றும் வரைபடங்களைத் தயார் செய்யத் தகுதி வாய்ந்த தொழில் சார்ந்த வல்லுநர் பதிவுக்கான விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக மட்டுமே பெற்றுப் பதிவுச் சான்று வழங்க வேண்டும்.

பதிவு செய்யப்பட்ட விவரங்கள் நகராட்சி நிர்வாக ஆணையருக்கு ஒவ்வொரு மாதமும் சமர்ப்பிப்பது அவசியம். மேலும், பொதுமக்கள் கட்டிட விண்ணப்பங்களையும், இணைப்பு ஆவணங்களையும் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பதால், நேரடியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் முறை முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுள்ளது.

உங்கள் கட்டிட விண்ணப்பங்களை http://tnurbanepay.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக சமர்ப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. முழுமையான ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை நகரமைப்பு ஆய்வாளர் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். இணையதளத்தில் ஆணையர் ஒப்புதல் அளித்தவுடன், கட்டணங்கள் கேட்பு மின்னஞ்சல் வாயிலாகவும், குறுஞ்செய்தி வாயிலாகவும் மனுதாரருக்கு அனுப்பப்படும். கட்டணங்கள் 15 நாட்களுக்குள் செலுத்தத் தவறினால் கோப்பு கட்டணம் செலுத்தாத காரணத்திற்காக அடுத்த 7 நாட்களில் மனுதாரருக்குத் தகவல் தெரிவித்துக் கோப்பு முடிக்கப்படும்.

பொதுமக்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் சரியாக இருந்தால் 3 நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும். விண்ணப்பத்தில் கூறியபடி கட்டடம் கட்டுவதை உறுதி செய்ய வேண்டும். தவறும் நபர்களின் மீது தகுந்த விதிகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பிற துறைகளின் பெயரில் வசூலிக்கப்படும் கட்டணங்களை நகராட்சி/மாநகராட்சியின் இதர செலவுகளுக்குப் பயன்படுத்துவதாகத் தெரியவந்தால் சம்பந்தப்பட்ட நகராட்சி, மாநகராட்சி ஆணையர், கணக்கர் மற்றும் பொறுப்பானவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu government announcement for building plan approval by online tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com