Bursting Cracker on Deepavali : தீபாவளி பட்டாசு வெடிக்க ஒதுக்கப்பட்டிருக்கும் இரண்டு மணிநேரத்தை காலை ஒரு மணி நேரம் இரவு ஒரு மணி நேரம் என பிரித்து ஒதுக்கியது தமிழக அரசு.
இந்த ஆண்டு தீபாவளி பணிடிகைக்கு பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் இரவு 8 முதல் இரவு 10 மணி வரை என இரண்டு மணி நேரம் மட்டுமே கால அவகாசம் அளித்தது.
தீபாவளி பட்டாசு வெடிக்கும் நேரம்
இதையடுத்து பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் அளித்த இரண்டு மணி நேரம் போதாது என்பதால் கூடுதலாக இரண்டு மணி நேரம் கோரிய தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்து, தீபாவளி பண்டிகை நாளன்று இரண்டு மணி நேரத்திற்கு மேல் பட்டாசுகளை வெடிப்பதற்கு அனுமதி வழங்க இயலாது எனவும், அந்த 2 மணி நேரத்தை தமிழக அரசே தீர்மானித்துக் கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை தொடர்ந்து தமிழக அரசு தீபாவளியன்று பட்டாசுகளை வெடிப்பதற்கு காலை 6 முதல் 7 மணி வரை மற்றும் இரவு 7 முதல் 8 மணி வரை நேரத்தை ஒதுக்கி அனுமதி வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.