தமிழகத்தில் நிலவும் மணல் பிரச்சனை தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், புதிதாக 70 குவாரிகளை திறக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நிலவும் மணல் தட்டுப்பாடு மற்றும் மணல் விற்பனையை ஒழுங்குபடுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று மதியம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் 8 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் 5 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டார்கள். கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் மணல் விற்பனையை ஒழுங்குபடுத்துவது குறித்து பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர்.
இந்தநிலையில், புதிதாக 70 மணல் குவாரிகளை தொடங்க கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மணல் விற்பனைக்கான கால தாமத பிரச்னையை தடுப்பதற்காக 70 மணல் குவாரிகளை தொடங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.