Advertisment

பணம்…பிரஸ்ஸர்…அரசு வழக்கறிஞர் நியமனங்கள் தாமதமாகும் பின்னனி என்ன?

திமுக தலைமைக் கழகத்துக்கு மிக நெருக்கமான கழக சட்டப்பிரிவு முன்னாள் நிர்வாகி ஒருவரின் தலையீடு வெளிவரப் போகும் லிஸ்டில் பிரதிபலிக்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளனர். தகுதி அடிப்படையில் இல்லாமல், பணம் கைமாறியதன் அடிப்படையில், அவரின் சிபாரிசு இருந்ததாகவும் வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

author-image
WebDesk
New Update
பணம்…பிரஸ்ஸர்…அரசு வழக்கறிஞர் நியமனங்கள் தாமதமாகும் பின்னனி என்ன?

TamilNadu Government Advocate Appointment Delay MK Stalin DMK Legal Wing : ஆட்சி மாற்றத்திற்கு ஏற்ப, அரசாங்க அதிகாரிகள் பதவி விலகுவதும், மாற்றப்படுவதும் வழக்கம். கடந்த
ஆட்சியில் நியமிக்கப்பட்ட அரசு வழங்கறிஞர்களை தற்போது ஆட்சி அமைத்திருக்கும் திமுக மாற்றிவிட்டு, தங்களது கட்சி சார்ந்த தகுதியுடைய வழக்கறிஞர்களை நியமிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், அதிமுக தோல்வியடைந்த உடனேயே, தலைமை வழக்கறிஞர் உள்பட பல அரசு வழக்கறிஞர்களும் பதவி விலகி வருகின்றனர்.

Advertisment

பலரும் பதவி விலகிய நிலையில், தமிழக அரசு சார்பாக தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞரும் முன்னாள் எம்.பியுமான சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார். முக்கிய வழக்குகளில் ஆஜராகி வந்த தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தவிர, மற்ற துறை சார்ந்த வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது, அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்களே ஆஜராகி வந்தனர். புதிய அரசு வழக்கறிஞர்களை நியமிக்கும் நடைமுறைகள் நிறைவடைவதற்கு முன்னதாக தற்காலிக அடிப்படையில், 17 வழக்கறிஞர்களை நியமிக்க, தலைமை செயலாளருக்கு அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்றக் கிளைக்கு 17 அரசு வழக்கறிஞர்களை தலைமைச் செயலாளர் இறையண்பு தற்காலிக அடிப்படையில் நியமித்தார்.

அதன் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்குகளில் வாதாட, பி.முத்துக்குமார், ஆர்.நீலகண்டன், சி. ஹர்ஷா ராஜ், எஸ். ஜான் ஜெ ராஜா சிங், ஏ. ஷப்னம் பானு ஆகியோரும், கிர்மினல் தன்மையுடைய வழக்குகளில் ஆஜராக ஏ. தாமோதரன், ஆர். முனியப்பராஜ், ஜெ. சி. துரைராஜ், இ. ராஜ் திலக், எல். பாஸ்கரன், ஏ. கோபிநாத் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சிவில் வழக்குகளில் ஆஜராக, மூத்த வழக்கறிஞர் வீர கதிரவன், பி. திலக் குமார், ஏ. கே. மாணிக்கம் ஆகியோரும், கிரிமினல் வழக்குகளில் ஆஜராக எஸ்.ரவி, எம். முத்துமாணிக்கம் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர். இது தொடர்பான அரசாணையில், அரசு வழக்கறிஞர் நியமண நடைமுறைகள் முடிந்து, புதிய வழக்கறிஞர்கள் நியமிக்கப்படும் வரை இவர்கள் பொறுப்பில் இருப்பார்கள் என குறிப்பிட்டிருந்தது. இவர்களை அடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு, குற்றவியல் தலைமை வழக்கறிஞராக ஹசன் முகமது ஜின்னா நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, நேற்று அதிமுக அரசால் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்கள் 138 பேர் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

தற்காலிக அடிப்படையில், அரசு வழக்கறிஞர்கள் கடந்த மாதம் நியமிக்கப்பட்ட நிலையில், துறை வாரியாக ஏறத்தாழ 160 பேர் நியமனம் செய்யப்படும் நிரந்தர வழக்கறிஞர் நியமனம் தொடர்ந்து கால தாமதமாகி வருகிறது. இது தொடர்பாக திமுக வட்டாரங்களில் அரசு வழக்கறிஞர்களை நியமிப்பது தொடர்பான முக்கிய முடிவுகளை அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரமும், என்.ஆர்.இளங்கோவும் முழுவதுமாக ஏற்று நடத்த ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் அரசு வழக்கறிஞர் நியமனம் என்பது நேர்மையான முறையில், விதிகளை பின்பற்றி நடத்த வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பதாக திமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது. அந்த வகையில், ஏறத்தாழ் 150 வழக்கறிஞர்களை நியமனம் குறித்து லிஸ்ட் ஒன்றும் இவர்களால் தயார் செய்யப்பட்டுள்ளதாம்.

இந்த நிலையில், திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஒரு சிலரை பரிந்துரைத்த போதிலும், அவரின் சிபாரிசை சண்முகசுந்தரமும், என்.ஆர்.இளங்கோவும் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டனராம். அரசு வழக்கறிஞராக குறிப்பிட்ட தகுதியுடையவர்களை மட்டுமே நியமிக்க இயலும் எனவும் கறாறாக சொல்லிவிட்டனராம். தற்போது, இந்த பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 5 நாள்களாக வெளியாகாமல் காலதாமதமாகி வருகிறது.

இது தொடர்பாக, திமுக வழங்கறிஞர் பிரிவு நிர்வாகிகளை தொடர்பு கொண்ட போது, சில முக்கிய தகவல்களும் வெளிவந்துள்ளன. திமுக தலைமைக் கழகத்துக்கு மிக நெருக்கமான கழக சட்டப்பிரிவு முன்னாள் நிர்வாகி ஒருவரின் தலையீடு வெளிவரப் போகும் லிஸ்டில் பிரதிபலிக்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளனர். தகுதி அடிப்படையில் இல்லாமல், பணம் கைமாறியதன் அடிப்படையில், அவரின் சிபாரிசு இருந்ததாகவும் வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த அழுத்தத்தின் காரணமாக பட்டியல் வருவது தாமதமாவதாகவும்,கழகத்திற்காக அரும்பாடுபட்ட வழக்கறிஞர் பிரிவு முக்கிய நிர்வாகிகள் சிலர் கண்ணீர் வடிக்கின்றனர். இதில், முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு, சண்முகசுந்தரம், என்.ஆர்.இளங்கோ அகியோரின் தகுதி அடிப்படையிலான பரிந்துரையின் பேரில் அறிவிப்பு வெளியாக வேண்டும் என வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் திமுக தலைமை கழகத்தை நாட திட்டமிட்டுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai High Court Dmk Dmk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment