அல்லாடும் தமிழக அரசு ஊழியர்கள்: பிப்ரவரி சம்பளம் இன்னும் கிடைக்கவில்லை

பல அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும்  தங்கள் பிப்ரவரி மாத சம்பக்ளத்தைக் கூட வாங்கவில்லை. இவ்வளவு பிடிவாதம் ஏன்? அரசாங்கம் IFHRMS திட்டத்தில் தீவிரமாக இருந்தால், முன்கூட்டியே...

மார்ச் மாதம் துவங்கி நான்கு நாட்களாகியும் இன்னும்  பல அரசு ஊழியர்களும்,ஆசிரியர்களும் தங்கள் பிப்ரவரி மாத சம்பக்ளத்தைக் கூட வாங்கவில்லை. அரசு ஊழியர்கள், பெரும்பாலும் மாத சம்பளத்தை மையமாக வைத்து வாழ்கையை நடத்துபவர்கள். எனவே, இந்த தாமதம் அரசு ஊழியர்கள் மத்தியல் சற்று மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏன் தாமதம்:  மாநிலத்தின் நிதிமேலாண்மை மற்றும் மனிதவள மேலாண்மையை ஒருங்கிணைந்து அரசு நிர்வாகத்தை மேம்படுத்தும் பொருட்டு, தமிழக அரசு  ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை (IFHRMS) என்ற திட்டத்தை கடந்த ஆண்டு துவங்கியது.

இத்திட்டத்தின் மூலம் சுமார் 9 இலட்சத்திற்கும் மேற்பட்ட அரசுப் பணியாளர்களின் பணிப்பதிவேடு பராமரிப்பு எளிமையான முறையில் கணினிமயமாக்கப்பட்டு சம்பளப்பட்டியல், பதவி உயர்வு, மாறுதல்கள், விடுப்பு மற்றும் இதர விபரங்கள் அவ்வப்போது உடனுக்குடன் பதியப்படும். மேலும், அரசின் நிதி நிர்வாகம் மற்றும் வரவு, செலவு குறித்த விவரங்களை நிகழ நேரத்தில் அறிந்து கொள்ள முடியும்.

ஏற்கனவே, நடைமுறையில் உள்ள WEB PAY ROLL / ATPBS  திட்டங்களில் பட்டியல் தயாரித்து, கடவுச்சொல் மூலம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைப்பதற்கு  8 முதல் 12 நாட்கள் வரையாகிறது. ஆனால்,IFHRMS திட்டத்தில், ஒரே நாளில் பட்டியலை தயாரித்து, இணையம் வாயிலாக கருவூலத்தில் சமர்பித்து, பயனாளியின் வங்கிக் கணக்கில், உடனடியாக வரவு வைக்க இயலும்.

இத்திட்டத்திற்கு தேவைப்படும் பென்பொருள் தயாரிக்கும் ஒப்பந்தத்தை தனியார் நிறுவனத்திடம் தமிழக அரசு அளித்தது. (அரசு நிர்வாகம் தொடர்பான தரவுகளை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பதா? என்ற கேள்வியும் அரசு ஊழியர்களிடம் உள்ளது )

இத்திட்டத்தை நடைமுறை படுத்தக்கூடிய பென்பொருளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் தமிழக அரசு தள்ளாடுகிறது. பென்பொருள் கோளாறுகளை சரி செய்ய அரசு துறைகளில் செயல்படும் பல தொழிநுட்ப நிபுர்ணகள் இதற்காக போராடி வருகின்றனர். இருப்பினும், இன்னும் சரி செய்த பாடில்லை.

“மென்பொருள் தயாராக இல்லாதபோது, ​​அரசாங்கம் ஏன் இந்த தவறான முயற்சியை மேற்கொள்கிறது? ஊதிய பில்கள் IFHRMS  மூலமாக மட்டுமே செயல்படுத்தப்படும் என்று அரசாங்கம் இன்னும் வலியுறுத்திகிறது  . இவ்வளவு பிடிவாதம் ஏன்? அரசாங்கம் IFHRMS திட்டத்தில் தீவிரமாக இருந்தால், முன்கூட்டியே நன்கு திட்டமிட்டிருக்க வேண்டும் என்று பெயர் தெரிவிக்க விரும்பாத அரசு ஊழியர் தெரிவித்தார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close