scorecardresearch

மீண்டும் சிக்கலில் இ.பி.எஸ்: லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு தமிழக அரசு அனுமதி

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

eps

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த  தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

2017 முதல் 2021-ம் ஆண்டு வரை தமிழகத்தின் முதல்வர் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி. தற்போது எதிர்கட்சி தலைவராக இருக்கிறார்.

இந்நிலையில் அவர் ஆட்சி செய்த காலத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து 4 ஆயிரம் கோடியில் தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டன. கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர் மற்றும் நீலகியில் மருத்துவக் கல்லூரிக்கான கட்டடங்கள் கட்டப்பட்டன. இதில் வழிமுறைகளை கடைபிடிக்காமல் டெண்டர் விடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தமிழக அரசிடம் அனுமதி கேட்டிருந்தனர். ஆரம்ப விசாரணைக்காக மட்டுமே அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இ.பி.எஸ் மீது வழக்கு பதிவு செய்யவில்லை.

மேலும் இந்த விசாரணையில் கூடுதல் ஆதாரம் கிடைத்தால், இ.பி.எஸ் மீது வழக்கு பதிவு செய்யப்படும். இந்நிலையில் முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்-யை விசாரணை செய்ய லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu government gives permission to dvac department to investigate edappadi k palaniswami