/indian-express-tamil/media/media_files/2025/08/24/flight-airport-2025-08-24-22-56-22.jpg)
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு தெரிவித்து அனுமதி கோரப்பட உள்ளது Photograph: (Representative Image)
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமையவிருக்கும் புதிய விமான நிலையத்திற்கான இடத்தை தமிழ்நாடு அரசு அடையாளம் கண்டுள்ளது. ஒசூர் நகரின் கிழக்கே, சூளகிரி தாலுக்காவில் (பேரிகை மற்றும் பாகலூர் இடையே) உள்ள ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு தெரிவித்து அனுமதி கோரப்பட உள்ளது.
2,300 ஏக்கர் நிலம் தேவை
தனேஜா ஏரோஸ்பேஸ் அண்ட் ஏவியேஷன் லிமிடெட் (டி.ஏ.ஏ.எல் - TAAL) விமான ஓடுபாதையில் இருந்து 15.5 கி.மீ தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளது. விமான நிலைய ஆணையம் (ஏ.ஏ.ஐ) நடத்திய சாத்தியக்கூறு ஆய்வுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஐந்து இடங்களில் இருந்து இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, தற்போது இறுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் குறைந்த அளவிலான இடையூறுகளே (சுமார் 75) உள்ளன. இதனால், கட்டுமானச் செலவும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விமான நிலைய திட்டத்திற்காக சுமார் 2,300 ஏக்கர் நிலம் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், சுமார் 650 ஏக்கர் நிலங்கள் அரசுக்குச் சொந்தமானவை.
விமானப் போக்குவரத்து வளர்ச்சி
ஒசூரில் தொடர்ந்து முதலீடுகள் அதிகரித்து வருவதால், புதிய விமான நிலையம் அமைவது இப்பகுதியின் தொழில்துறை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். பெங்களூருவின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமையவிருக்கும் நிலையில், ஒசூர் விமான நிலையத் திட்டத்தையும் தமிழக அரசு விரைவுபடுத்தியுள்ளது. திட்டத்தில் சவால்கள் இருந்தாலும், அதை நிவர்த்தி செய்வதற்கான வழிகளையும் அரசு ஆராய்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் நிலம் கையகப்படுத்துவதற்கான திட்டத்தை விரைவில் தயார் செய்து அரசுக்குச் சமர்ப்பிப்பார். மேலும், பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து தனி விமானக் கட்டுப்பாட்டு மண்டலத்திற்கான அனுமதியையும் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மதிப்பீடுகளின்படி, ஒசூர் விமான நிலையத்திற்கு சுமார் 2,300 ஏக்கர் நிலம் தேவைப்படும். இதில், சுமார் 650 ஏக்கர் நிலங்கள் அரசுக்குச் சொந்தமானவை.
ஒரு தனி விமானக் கட்டுப்பாட்டு மண்டலத்தை உருவாக்குவது தொடர்பாக மாநில அரசு ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சகத்திற்கு எழுதியுள்ள நிலையில், இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தைப் பற்றி விரைவில் அவர்களுக்குத் தெரிவித்து, அவர்களுடன் விவாதிக்கும். இந்த அனுமதியும் இன்னும் சில மாதங்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூருவின் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்திற்கான இடம் இறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், முதலீடுகள் தொடர்ந்து வருவதால், ஒசூரில் விமான நிலையம் அமைந்தால் அது தொழில்துறை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். “ஒசூர் விமான நிலையம் திட்டத்தில் சவால்கள் உள்ளன என்பதை நாங்கள் அறிவோம், ஆனால் அதை ஒரு யதார்த்தமாக்குவதற்கான தீர்வுகளையும் நாங்கள் செய்து வருகிறோம்” என்று வட்டாரங்கள் மேலும் கூறியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.