ஆன்லைன் மூலம் போதை மாத்திரி விற்பனை நடைபெற்று வருவதாகவும் இதனை தடுக்க, ஆன்லைன் செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாகு மத்திய சுகாதாரத்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவ்வப்போது போதை பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் போதை பொருள் விற்பனை குறித்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே சமீப காலமாக, நேரடியாக இல்லாமல், இளைஞர்களிடம் ஆன்லைன் மூலமாக போதை பொருள் விற்பனை நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், போதை பொருள் விற்பனை செய்யும் ஆன்லைன் செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி மத்திய சுகாராதத்துறை செயலாளருக்கு, தமிழக சுகாரதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாகு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தில், "ஆன்லைனில் போதை மாத்திரை விற்பனையை தடுக்க வேண்டும். ஆன்லைன் செயலிகள் மூலம் போதை மாத்திரை விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் ஆன்லைன் செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய சுகாதாரத்துறை செயலாளருக்கு தமிழக மருத்துவத்துறை செயலாளர் சுப்ரியா சாகு கடிதம் எழுதியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“