2022-23 ஆம் ஆண்டில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் (பி.டி.எஸ்) மக்களுக்கு அரிசி விநியோகம் செய்யப்பட்டதில், ஏற்பட்ட கசிவுகளால் பொது விநியோக முறையில், தமிழ்நாடு அரசு ரூ1,900 கோடி இழப்பைச் சந்தித்ததாக சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் (ICRIER) சமீபத்தில் வெளியிட்டது.
இது குறித்து தி இந்து செய்தியில் வெளியிட்டுள்ள தகவலின்படி, ராய தாஸ், ரஞ்சனா ராய் மற்றும் அசோக் குலாட்டி ஆகியோர் அடங்கிய குழு ஆய்வு நடத்தி வெளியிட்ட ஆய்வின் அறிக்கையில், 5.2 லட்சம் டன் அரிசியில் 15.8 சதவீதம், கசிவு ஏற்பட்டு சிந்தியதாக கூறப்பட்டுள்ளது. பி.டி.எஸ் மூலம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-23-ம் ஆண்டிற்கான அரிசியின் பொருளாதாரச் செலவு ஒரு குவிண்டால் அரிசிக்கு ரூ3,670 நிர்ணையம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மாநிலத்தின் பாரம்பரிய விதியின்படி, ஒரு குடும்பத்திற்கு மாதம் ஒன்றுக்கு 20 கிலோ அரிசி என்ற விநியோகித்து வரும் நிலையில், மூட்டையில் ஏற்பட்ட கசிவின் காரணமாக சிந்திய அரிசியின் அளவு சுமார் 21.67 லட்சம் குடும்பங்களுக்கு உணவளித்திருக்கும் அளவுக்கு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும், 2013 ஆம் ஆண்டின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், குடும்பத்தில் ஒவ்வொரு நபரும் மாதத்திற்கு ஐந்து கிலோ வழங்க வேண்டும். அதேபோல் மே 31, 2024 நிலவரப்படி, தமிழ்நாட்டில் சுமார் 2.2 கோடி அரிசி வரைதல் ரேஷன் கார்டுகள் உள்ளன என்று கணக்கிடப்பட்டுள்ளது.
மதிப்பீடுகளைக் கணக்கிடும் நோக்கத்திற்காக, சட்டம் அமலுக்கு வந்த பிறகு, இந்திய உணவுக் கழகத்தின் (FCI) மாதாந்திர ஆஃப்டேக் தரவுகளுடன், வீட்டு உபயோகச் செலவுக் கணக்கெடுப்பு 2022-23ன் தரவை ஆய்வு குழுவினர் சீரமைத்துள்ளனர். அதன்படி, ஆகஸ்ட் 2022 முதல் ஜூலை 2023 வரை தரவுகளில் என்.எஃப்.எஸ்.ஏ (NFSA) டைட்-ஓவர், என்.எஃப்.எஸ்.ஏ (NFSA) அல்லாத மாநில அளவிலான ஒதுக்கீடுகள் மற்றும் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) திட்டத்தின் கீழ் அரிசி வழங்கப்படுகிறது.
அரிசி கசிவு தொடர்பான ஆய்வில் இருந்து தமிழ்நாடு இரண்டு அம்சங்களில் ஆறுதல் பெறலாம். கசிவு குறைவாக இருக்கும் மாநிலங்களில் பட்டியலில் தமிழ்நாடு 7-வது இடத்தில் உள்ளது. ஆனாலும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தமிழ்நாட்டை விட கசிவு விகிதம் குறைவாக உள்ளது. அகில இந்திய அளவில், தோராயமாக 20 மில்லியன் டன் அரிசி மற்றும் கோதுமை மக்களுக்கு சென்றடையவில்லை. இதனால் சுமார் ரூ69,108 கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஆய்வின் முடிவுகள் இவ்வாறு இருந்தபோதிலும், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மூலம் உணவு பொருட்களின் கசிவைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. ஜனவரி 1, 2023 முதல் மே 31, 2024 வரை, சிவில் சப்ளைஸ் சிஐடி சுமார் 42,500 குவிண்டால் கடத்தப்பட்ட அரிசியை பறிமுதல் செய்தது, அதன் மதிப்பு சுமார் ₹2.4 கோடி. அதேபோல் “ஆதார் அடிப்படையில் குடும்ப அட்டை வழங்கப்படுவதால், போலி குடும்ப அட்டை புழக்கம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது என்று 2024-25 ஆம் ஆண்டிற்கான சிவில் சப்ளைஸ் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கொள்கைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.