நீட் விலக்கு மசோதா: வரவேற்கும் காங்கிரஸ், வி.சி.க; எதிர்க்கும் பாஜக

Tamilnadu government NEET bill congress vck welcomes neitizens splits: நீட் விலக்கு மசோதாவை வரவேற்கும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள்; அறிவாலயத்தின் நாடகம் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை ட்வீட்

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு கோரும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வு விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது.

நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆராய, தமிழக அரசால் அமைக்கப்பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்தனர். இந்த அறிக்கை அடிப்படையில் சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதாவை முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி கூறினார்.

இதற்கிடையே, நீட் தேர்வால் பல நன்மைகள் இருப்பதாக பேசிய பாஜகவின் நயினார் நாகேந்திரன், கூட்டணி கட்சிகளுக்கும், எங்களுக்கும் வெவ்வேறு கருத்துகள் இருப்பதாக கூறி பேரவையிலிருந்து வெளியேறினர்.

இதையடுத்து, தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தும் வகையில் சட்ட மசோதா நிறைவேறியது.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதா : ஒட்டுமொத்த இந்தியாவுக்கே வழிகாட்டும் துணிச்சலான முடிவு! மத்திய தொகுப்புக்கு மருத்துவக் கல்வி இடங்கள் வழங்குவதையும் கைவிட வேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பாராட்டி வரவேற்கிறது! என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறுகிற வகையில் மசோதாவைத் தாக்கல் செய்து நிறைவேற்றியிருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மனதாரப் பாராட்டுகிறேன். தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு பெற தமிழக அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் நிச்சயம் வெற்றி பெறும். நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாத தமிழக மாணவர்கள் அனிதா உள்ளிட்ட 16 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். தற்போது கூட, சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதற்கு அன்றைய அ.தி.மு.க. ஆட்சி தான் முழு பொறுப்பாகும். மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தி.மு.க. தலைமையிலான, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணி கட்சி உறுப்பினர்கள், மத்திய பா.ஜ.க. அரசுக்கு உரிய அழுத்தத்தைக் கொடுப்பார்கள். என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.

சிலர் நீட் தேர்வு தொடர வேண்டும் எனவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அவர்களில் சிலர், நீட் தேர்வால் ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவு நிறைவேறுவதாகவும் பதிவிட்டுள்ளனர்.

இதனிடையே அறிவாலயத்தின் அரசியல் நாடகம் அம்பலத்தில். இன்று தமிழக சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம்! இன்னொரு நாள், இன்னொரு பொய். அப்பாவி மக்களை தவறாக வழிநடத்தும் அரசியல் பொய்கள் மற்றும் புரட்டு! பண்ணை விவசாய சட்டம் தவறா? சிஏஏ தவறா? நீட் தவறா? எங்கே தவறு? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu government neet bill congress vck welcomes neitizens splits

Next Story
51 விதமான தகவல் சேகரிப்பு; யார் யாருக்கு நகை கடன் தள்ளுபடி? ஸ்டாலின் பட்டியல்jewellers protesting against new hallmarking process, Chennai hallmarking unique ID, HUID, BIS, நகைக்கடைகள், நகைக்கடை உரிமையாளர்கள் ஸ்டிரைக், ஹால்மார்க், புதிய ஹால்மார்க் விதிக்கு எதிர்ப்பு, சென்னை, தமிழ்நாடு, The Chennai Jewellers’ Association, Bureau of Indian Standards, Jwellers token strike, tamil nadu jewellers
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com