/tamil-ie/media/media_files/uploads/2022/02/ration-shop-1200-1.jpg)
Tamilnadu News Update : தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம், குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி மற்றும் குறைந்த விலையில் பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கோடிக்கணகக்கான மக்கள் இதன் மூலம் பயனடைந்து வரும் நிலையில், ரேஷன்கடைகள் சரியாக திறப்பதில்லை, பொருட்கள் தரமான முறையில் வழங்கப்படுவது இல்லை என்ற புகார்களும் அவ்வப்போது வந்துகொண்டு இருக்கிறது.
இந்த புகார்களை கருத்தில் கொண்டு அதிகாரிகள், ரேஷன்கடைகள் சரியாக இயங்குகின்றனவா பொதுமக்களின் தேவைகள் சரியான அளவில் பூர்த்தி செய்யப்டுகின்றதா என்பதை கண்காணிக்கும் வகையில் உயர் அதிகாரிகள் அவ்வப்போது ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும் பல இடங்களில் ரேஷன் கடைகளில் மக்கள் கடுமையான இன்னல்கள் சந்தித்து வருவது தொடர்ந்து வருகிறது.
இதில் மக்களின் வசதிக்கு ஏற்ப ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் விலைப்பட்டியல், மற்றும் கையிருப்பு உள்ள பொருட்களின் விபரங்களை அங்கருக்கும் பலகையில் எழுதி வைகக வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் பல ரேஷன் கடைகளில் இந்த முறை கடைபிடிக்கப்படாமல் உள்ளது என்று பொதுமக்களிடம் இருந்து அதிகமான புகார்கள் வந்துள்ள நிலையில், தற்போது தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி ரேஷன் கடைகளில், இனிமேல், அறிவிப்பு பலகையில், ரேஷன் கடையில் உள்ள பொருட்களின் விலை மற்றும் கையிருப்பு உள்ள பொருட்களின் விபரங்களை தெளிவாக குறிக்க வேண்டும் என்றும், உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக உணவுப்பொருள் வழங்கல்மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,
குடும்ப அட்டைதாரர்களிம் இருந்து பெறக்கூடிய புகார்கள் அடிப்படையிலும், நியாயவிலை கடைகள் தணிக்கையின் பொது அறிய கூடிய வகையில், விபரங்கள் அடிப்படையிலும், தகவல் பலகை நியயவிலைக்கடைகளில் சரிவர பராமரிக்கப்படவில்லை என தெரிய வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே வழங்கிய அறிவுரைகளோடு மேலும்சில அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.
அதாவது பொது வினியோக திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து நியாயவிலை கடைகளிலும் தகவல் பலகைகள் கீழ்காணும் விவரங்களை உள்ளடக்கி குடும்ப அட்டைதாரர்கள் தெரிந்துகொள்ளும வகையில் காட்சிப்படுத்த வேண்டும். இன்றியமையாப் பாண்டங்கள் இருப்பு விவரம், கடைப்பணியாளர்களால், தினசரி பூர்த்தி செய்து காடசிப்படுத்தப்பட வேண்டும். அறிவிப்பு பலகைகளில், நியாயவிலைக்கடையின் வேலை நேரம் இன்றியமையாப் பாண்டங்கள் இருப்பு விபரம், ஆரம்ப இருப்பு பெற்றது வினியோகம் செய்யப்பட்டது. இறுதி இருப்பு உள்ளிட்ட விவரங்களை தினசரி பராமரிக்கப்பட வேண்டும்.
இன்றியமையாப் பண்டங்கள் வழங்கப்படும் அளவு மற்றும் அவற்றின் விற்பனை விலை குறித்த தகவல் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும். மேலும், நியாய விலை கடைகள் தொடர்பாக புகார் தெரிவிக்கக் கூடிய உயர் அலுவலர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் செல்பேசி எண்கள் இடம் பெற்றிக்க வேண்டும். உணவுத் துறை அமைச்சர் 044-2567 1427, உணவுத் துறை செயலாளர் 044-2567 2224, உணவுப் பொருள் வழங்கல் ஆணையாளர் 044-2859 2255 உள்ளிட்டோரின் எண்கள் இடம் பெற வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.