Tamilnadu New Covid Regulations : தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்து வருவதால், தொற்று பாதிப்பை தடுக்க அரசு தரப்பில் பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தற்போது தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பாதிப்பு தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் தீவிர பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் பல நாடுகளில் கொரோனா தொற்று 4-ம் அலைகள் தோன்றியுள்ளது. இதனால் உலகளவில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க தற்போது கொரேனா தொற்றின் உருமாறிய வகையான ஒமைக்ரான் தொற்று கொரோனாவுக்கு இணையாக பரவி வருகிறது.
தென்ஆப்பிரக்காவில் கடந்த நவம்பர் மாதம் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று டெல்டா வைரஸ் பாதிப்பை விட வேகமாக பரவும் திறன் கொண்டதாக உள்ளது. தற்போது வரை இந்தியா உட்பட 100-க்கு மேற்பட்ட நாடுகளில் ஒமைக்ரான் தொற்று பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதால். அவசரநிலை பிரகணப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் பரவிய கொரோனா தொற்றின் 2-வது அலை கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுத.
இதன் காரணமாக இந்தியாவில் விரைவில் இயல்பு நிலை திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஒமைக்ரான் தொற்று அச்சுறுத்தலை தொடங்கியுள்ளது. அதனுடன் சேர்ந்து கொரோனா தொற்றும் வேகமாக பரவி வருவதால் இந்தியாவில் கொரோனா 3-வது அலை தொடங்கிவிட்டதாக பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதன் பாதிப்பை தடுக்கும் வகையில் கட்டுப்பாடுகளை அமல்படுத்த மாநில அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
இதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் கடுமையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை தொடர்ந்து இரவு நேர ஊரடங்கு, சுப நிகழ்ச்சிகள், அரசியல் பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட பலவற்றிற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்துவது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டர். இ்ந்த ஆலோசனையின் முடிவில், தமிழகத்தில் நாளை முதல் (டிசம்பர் 6) மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள் உணவகங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பொதுமக்கள் முககவசம் அணிதல் போன்ற கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். மேலும் பேருந்தின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மக்களின் அத்தியாவசிய தேவைகளான பால், பத்திரிக்கை, மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த இதர வசதிகள் அனைத்து இரவு நேர ஊரடங்கின் போது செயல்படும். பெட்ரோல் பங்க்குள் 24 மணி நேரம் செயல்பட அனுமதி.
தொடர்ந்து வரும் டிசம்பர் 9-ந் தேதி முதல் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மக்களின் அத்தியாவசிய தேவைகளாக பால், மருத்துவம் ஏடிஎம் மையங்கள் பெட்ரோல் பங்க்கள் வழக்கம் போல் இயங்கும் பொது போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் சேவை இயங்க அனுமதி இல்லை.
பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்புவரை வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வை கருத்தில் கொண்டும் 10, 11, மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்ச்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு ஜனவரி 20-ந் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயிலில் 50 சதவீத பயணிகளுக்கு அனுமதி.கேளிப்பை மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்பட தடை.. கடற்கரைகளில் நடைப்பயிற்சிக்கு மட்டுமே அனுமுதி. வெள்ளி சனி ஞாயிறு ஆகிய 3 நாட்களிலும் கோயில்கள் திறக்க தடை சமூகதாய கலாசசார மற்றும் அரசில் பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் விடுதிகள் அடுமனைகள் தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.
திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி. திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த சுப நிகழ்ச்சிகளுக்கு 100 பேர் மட்டுமே அனுமதி இறப்பு நிகழ்வுகளுக்கு 50 பேர் மட்டுமே அனுமதி அழகு நிலையங்கள் மற்றும் சலூன் கடைகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி. உள் அரங்கு விளையாட்டு போட்டிகள் மற்றும் இசை நிகழ்சிகள் நாடகங்களுக்கு 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி. என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil