Advertisment

நீட் இலவச பயற்சி திட்டத்தை கைவிட தமிழக அரசு யோசனை

நீட் தேர்வு குறித்து அரசின் நிலைப்பாடு மாறியிருப்பதால், நீட் இலவச பயற்சி வழங்குவது கொள்கை முரண்பாடாக இருக்குமா? என்ற கோணத்தில் தமிழக அரசு யோசித்து வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Neet Coaching Classes will begin soon , education minister, government free neet coaching

Neet Coaching Classes will begin soon , education minister, government free neet coaching

மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு கடந்த இரண்டு ஆண்டுகளாக நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி மூலம் நடத்தப்பட்டு வருகிறது.

Advertisment

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏழை எளிய  மாணவர்களின் உயர்க்கல்வியை கருத்தில் கொண்டு பள்ளிக் கல்வித் துறை  சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

2020-21 நீட் தேர்வு : 

இந்த ஆண்டு நீட் தேர்வு மே மாதம் நடக்க உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை பெறப்பட்டன.

இந்நிலையில்,  நீட் தேர்வைக் கட்டாயமாக்கும் மத்திய அரசின் சட்டதிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனுதாக்கல் செய்தது.  நீட் தேர்வினால் கிராமப்புற மாணவர்கள் பெரும் அளவில் பாதிக்கப்படுவதாகவும் தனது வாதத்தில் தமிழக அரசு தெரிவித்தது.

நீட் தேர்வுக்கு தயாராக A 'டூ' Z டிப்ஸ்

நீட் தேர்வு குறித்து அரசின் நிலைப்பாடு மாறியிருப்பதால், நீட் இலவச பயற்சியை தொடர்ந்து  வழங்க வேண்டுமா? அவ்வாறு வழங்கினால் அது கொள்கை முரண்பாடாக இருக்குமா? நீதிமன்ற வழக்கு விசாரணையில் தனக்கு எதிராக முடியுமா?  என்ற கோணத்தில்  பள்ளி கல்வித்துறை யோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Neet
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment