Advertisment

திருவண்ணாமலை தீப திருவிழா: சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் இடங்கள் என்னென்ன?

திருவண்ணாமலை தீப திருவிழாவை முன்னிட்டு, தமிழக அரசின சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
Busses

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு 4089 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவண்ணாமலையில் 9 தற்காலிக பேருந்து நிலையங்கள் மூலம் கிரிவலப் பாதைக்கு செல்ல 40 மினி பேருந்துகள் இயக்கம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான கோவில்களில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலும் ஒன்று. தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்யும் இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுணர்மி தினத்தில் கிரிவலம் சுற்ற ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இதனால் இந்த தினங்களில் சில மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.

அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கார்த்திகை தீப திருவிழா நாளில், திருவண்ணாமலை மலையில் தீபம் ஏற்றப்படும் 3 நாட்கள் கொண்டாடப்படும் இந்த பண்டிகை தினத்தில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள். அந்த வகையில், 2024-ம் ஆண்டு தீப திருவிழா வரும் டிசம்பர் 13-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

தீப திருவிழாவை முன்னிட்டு, காலையில் மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும் நிலையில், மாலை 6 மணிக்கு, 2668 அடி உயரம் உள்ள மலை மீது தீபம் ஏற்றப்படும். இந்த நிகழ்வை காரண பலாயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு திரண்டு வருவார்கள். அநத வகையில் இந்த ஆண்டு சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக திருவண்ணாமலை தீப திருவிழாவை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் 4089 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

Advertisment
Advertisement

சென்னை பெங்களூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இந்த சிறப்பு பேருந்துகள் இயங்கும் என்றும், திருவண்ணாமலையில் 9 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் கிரிவலப் பாதைக்கு செல்ல 40 மினி பேருந்துகள் இயக்கம் செய்யப்படும். அதேபோல் பயணிகளின் வசதிக்காக 150 தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Thiruvannamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment