தமிழக அரசு மாநிலம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி வரும் பொங்கல் பரிசுத்தொகுப்பை பெறுவதற்கான அவகாசம் ஜனவரி 21ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு மாநிலம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி வரும் பொங்கல் பரிசுத்தொகுப்பை பெறுவதற்கான அவகாசம் ஜனவரி 21ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
Advertisment
நடிகர் ரஜினிகாந்துடன் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் சந்திப்பு..
தமிழக அரசு, பொங்கல் பண்டிகையை ஏழை, எளிய மக்களும் மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வகையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000ம் மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்புத் துண்டு உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி வருகிறது.
இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி ஜனவரி 9ம் தேதி தொடங்கி இன்று ஜனவரி 13ம் தேதியுடன் நிறையவடைய இருந்தது.
ஆனால், பொங்கல் பரிசுத் தொகுப்பு இதுவரை 95 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான காலக்கெடு இன்று திங்கள்கிழமையுடன் முடிவடைய இருந்த நிலையில், தமிழக அரசின் பொங்கல் பரிசை வாங்காதவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறுவதற்கான கால அவகாசத்தை ஜனவரி 21ம் தேதி வரை நீட்டித்து அறிவித்துள்ளது.