/tamil-ie/media/media_files/uploads/2021/10/governor-Vc-meeting.jpg)
சக மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆராய்ச்சி இதழ்களில் தரமான ஆய்வுகள் மற்றும் வெளியீடுகளின் அவசியத்தை பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உடனான கூட்டத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தினார்.
தமிழக பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் தொடர்பாக, பல்கலைக்கழகங்களின் வேந்தரும் ஆளுநருமான ஆர்.என்.ரவி, நேற்று (அக்டோபர் 30) துணைவேந்தர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் உயர்கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் 20 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் கலந்துக் கொண்டனர். கூட்டத்தில் பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சி திட்டங்கள் மற்றும் பேராசிரியர் காலிப்பணியிடங்கள், பல்கலைக்கழக செயல்பாடுகள் உள்ளிட்ட விஷயங்களை ஆளுநர் கேட்டறிந்தார்.
ராஜ்பவனில் துணைவேந்தர்களுடன் தனது முதல் சந்திப்பின் போது உரையாற்றிய ரவி, தமிழ்நாடு 20 மாநிலப் பல்கலைக்கழகங்களைக் கொண்டிருப்பதற்கும், மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தையும் பாராட்டினார்.
மாநிலத்தின் உயர்கல்வி கணிசமாக விரிவடைந்துள்ள நிலையில், கல்வித் திறன் மற்றும் தரமான ஆராய்ச்சியில் கவனம் செலுத்துமாறு துணைவேந்தர்களை ஆளுநர் வலியுறுத்தினார் என்று ராஜ் பவனில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களின் பலம் மற்றும் பலவீனம் குறித்து நேர்மையான மதிப்பீட்டை துணைவேந்தர்கள் வைத்திருக்க வேண்டும் என்று ஆளுநர் பரிந்துரைத்தார், இதனால் பலத்தைப் பயன்படுத்தவும், பலவீனங்களைக் கையாளவும் முடியும் என்றும் அவர் கூறினார். கற்பித்தல் மூலம் அறிவைப் பரப்புவதிலும், ஆராய்ச்சி மூலம் அறிவை உருவாக்குவதிலும் பல்கலைக்கழகங்கள் ஈடுபட வேண்டும் என்றார். உயர்கல்வியின் தரத்தை உறுதிசெய்ய அறிவு உருவாக்கத்தை தொடர்ந்து மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். மேலும் ஆசிரியர் ஆசிரிய பணியிடங்களை நிரப்புவதில் தரத்தை உறுதி செய்யுமாறு துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தினார்.
பல்கலைக்கழகங்களுக்கு உதவியதற்காக, குறிப்பாக அவர்களின் நிதி நெருக்கடியைத் தணிப்பதற்காக மாநில அரசாங்கத்தைப் பாராட்டிய ஆளுநர், ''கல்வி மற்றும் ஆராய்ச்சியின் தரத்தை உயர்த்துவதற்கு பல்கலைக்கழகங்களை ஊக்கப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார். அப்போது, துணைவேந்தர்கள் தங்கள் பல்கலைக் கழகங்களைப் பற்றி பவர் பாயின்ட் விளக்கக்காட்சியை ஆளுநருக்கு காண்பித்தனர். மாநில அரசின் மூத்த செயலாளர்கள், மாநிலப் பல்கலைக்கழகங்களின் நிலை குறித்தும், நிதி உதவி உள்ளிட்ட ஆதாரங்களில் அரசு அவர்களுக்கு எப்படி உதவி செய்து வருகிறது என்பது குறித்தும் விளக்கினர்.
Hon’ble Governor as Chancellor to 20 State Universities had meeting with the Vice-Chancellors of the State Universities and Senior Secretaries of the State Government at Darbar Hall in Raj Bhavan, Chennai today (30.10.2021). pic.twitter.com/4GKOvFACzd
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) October 30, 2021
துணைவேந்தர்கள், பதிவாளர்கள், மூத்த செயலாளர்கள் தவிர, ஆளுநரின் செயலாளர் ஆனந்தராவ் வி பாட்டீல், ஆளுநரின் (பல்கலைக்கழகங்கள்) துணைச் செயலாளர் சி.முத்துக்குமரன் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.