தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற ஆர்.என்.ரவி மாமல்லபுரத்தை பார்வையிட தனது குடும்பத்தினருடன் வந்தார்.
தமிழகத்தின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றப்பட்ட பிறகு, தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து ஆளுநர் ரவி நேற்று (செப்டம்பர் 18) காலை ராஜ்பவனில் ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், காலையில் தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற ஆர்.என்.ரவி மாலையில் மாமல்லபுரத்திற்கு குடும்பத்துடன் வந்தார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று மாலை 4:30 மணியளவில் தனது குடும்ப உறுப்பினர்களுடன் மாமல்லபுரம் கடற்கரைக்கு வந்தார். ஆளுநரை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் வரவேற்றனர்.
ஆளுநர் ஆன்.என்.ரவி மற்றும் அவரது குடும்பத்தினர் சுமார் அரை மணி நேரம் கடற்கரை கோவில் மற்றும் அங்குள்ள கற்சிறபங்களைப் பார்த்து ரசித்தனர். மேலும் மாமல்லபுரத்தின் சிறப்புகளையும் கேட்டறிந்தனர். ஆளுநரின் வருகையையொட்டி மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil