/tamil-ie/media/media_files/uploads/2022/05/R-N-Ravi.jpg)
திமுக ஆட்சி ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுனர் ஆர்.என.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி கட்சிகள் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று 10 வருடங்களுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மே மாதம் 7-ந் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
அன்றுமுதல் கொரோனா உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கை எடுத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வரும் திமுக அரசு இன்றுடன் பொறுப்பேற்று தனது ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இந்த நாளை போற்றும் விதமாக பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகினறனர்.
அந்த வகையில் தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி முதல்வர் ஸ்டாலினுக்கு தனது வாழத்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர், திரு.ஆர்.என்.ரவி அவர்கள், ஆட்சியின் முதலாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin மற்றும் அனைத்து அமைச்சர்களுக்கும் தனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். @CMOTamilnadu
— RAJ BHAVAN,TAMIL NADU (@rajbhavan_tn) May 7, 2022
ஆட்சியின் முதலாம் ஆண்டு நிறைவை கொண்டாடும் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அனைத்து அமைச்சர்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.