/tamil-ie/media/media_files/uploads/2022/01/r-n-ravi-1-1.jpg)
Violent Protest against T.N Governor RN Ravi
Ask Governor to send NEET Bill to President,Black Flag Protest against T.N Governor
பரபரப்பான அரசியல் சூழலில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி புறப்பட்டு செல்கிறார். நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா விவகாரத்தில், தமிழக ஆளுனர் அளித்த தேநீர் விருந்தை தமிழக அரசும், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளும் புறக்கணித்தன.
இந்த சூழ்நிலையில், ஆளுனர் ரவி மயிலாடுதுறை சென்றபோது, அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து சில கட்சியினர் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் பதிவு செய்தார். நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளும் கட்சி தரப்பில் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், ஆளுநர் இன்று (ஏப்ரல் 20) காலை 10.30 மணிக்கு சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
சென்னையில் ஸ்மார்ட் சாலைகளாக மாறப்போகும் 7 இடங்கள்… எந்தெந்த சாலைகள் தெரியுமா?
அங்கு, குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் உள்ளிட்டோரை அவர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீட் மசோதா தொடர்பான அறிக்கையை அவர் தயாரித்துள்ளதாகவும், அதை மத்திய அரசுக்கு அனுப்ப உள்ளதாகவும் சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.