இனம்,மொழி,சாதிகளின் பெயரால் சமுதாயத்தை பிளவுப்படுத்த முயற்சிகள் நடப்பதால் மக்கள் விழிப்புணர்வோடு இருக்க அவர் கேட்டுக்கொண்டுள்ளர். நாட்டின் 76 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு அவர் ஆற்றிய உரையில் இதனை கூறியுள்ளார்.
உரையின் தொடக்கத்தில் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை கூறிவிட்டு, தமிழகத்தின் கல்வி நிலை, போதைப்பொருள் புழக்கம், பட்டியலினத்தவருக்கு எதிரான கொடுமைகள் , குறைந்த தனியார் முதலீடுகள் என பல்வேறு நிலைகளை சுட்டிக்காட்டி கவலை தெரிவித்தார்.
2047 ஆம் ஆண்டு வளர்ச்சி அடைந்த பாரதமாக உருவாகும் பார்வையில் நமது தேசம் தன்னம்பிக்கையோடு பயணித்து வருகிறது என்றும் உள்நாட்டிலும் அயல்நாட்டிலும் சில சுயநலமைகளும் எதிர் சக்திகளும் நமது முன்னேற்றத்தின் வேகத்தை குறைக்க முயற்சி செய்து வருகிறார்கள் என்றும் தெரிவித்தார்.
இனம், சமயம், மொழி, சாதிகளின் பெயரால் நமது சமுதாயத்தை பிளவுபடுத்தி நமது இலக்கை தடுக்க முயற்சிக்கிறார்கள் என்றும் கூறினார்.
நமது அரசியல் சட்டத்திட்டத்தின் மீதும் அரசியல் சட்டபூர்வமாக நிறுவப்பட்ட அமைப்புகளின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கைகளை சீர்குலைக்கும் வகையில் பொய்யான கருத்துக்களை பரப்பி வருகிறார்கள்.
இது பாரத தேசத்தின் பொற்காலம். இது அதன் மறுமலர்ச்சியுகம். பத்தாண்டுகளுக்கு முன்னர், பலவீனமான ஐந்து பொருளாதாரங்களில் ஒன்றாக விளங்கிய நாம், இன்று உலகின் 5-ஆவது மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக ஆகியிருப்பதோடு, விரைவில் உலகின் 3-ஆவது மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாகவும் ஆக இருக்கிறோம்.
சர்வதேச போதைப்பொருள் கூட்டமைப்புகளோடு தொடர்புடைய, சக்திவாய்ந்த போதைப்பொருள் கும்பல்கள் நமது மாநிலத்தில் இயங்கி வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன என்றும் கூறினார்.
எனவே இத்தகைய தேச விரோத கூறுகளுக்கு எதிராக மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என்று அனைவரையும் தாம் வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.