கவுரவ விரிவுரையாளர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்குவது அவர்களை அவதிக்கும் செயல் என்று தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்தின் பாரதிய ஜன சங்கத்தின் தலைவர் தீனதயாள் உபாத்யாயா பெயரில் அமைந்துள்ள ஆராய்ச்சி இருக்கையின் சார்பில், பேராசிரியர் தர்மலிங்கம் மொழி பெயர்த்த தீனதயாள் உபாத்யாயாவின் இரு நூல்களை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும் நிகழ்ச்சி சென்னை ஆளுனர் மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று நூல்களை வெளியிட்ட தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி, உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில், 75 ஆண்டுகளுக்கு பின்பும் இந்தியாவில், பலர் ஏழைகளாக இருப்பதற்கு மேற்கத்திய கோட்பாடுகளை பின்பற்றியதே காரணம். பரினாம வளர்ச்சிக்கு சார்லஸ் டார்வினையும், ஜனநாயகத்திற்கு ஆபிராம் லிங்கனையும் உதாரணமாக காட்டுவது மேற்கத்திய மனநிலை. இந்தியாவை சிதைத்த காரல் மார்க்ஸின் சிந்தனை தற்போது ஓரம்கட்டகப்பட்டுள்ளது.
உலக நாடுகள் பல பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் உள்ளன. ஆனால் இந்தியாவிடம் அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு உள்ளது. 25 ஆண்டுகளில் உலகின் பெரும் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் கல்லூரிகளில் பணியாற்றும் கவுர விரிவுரையாளர்களுக்கு நிறைய படித்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு ஊதியமாக 10 ஆயிரம் மட்டுமே வழங்குவது அவர்களை அவதிக்கும் செயல் என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil