த.இ.தாகூர்., கன்னியாகுமரி.
இந்திய வரலாறு மறைக்கப்பட்டுள்ளது,மாறைக்கப்பட் நம் மறபை மீட்டு எடுப்பது மிகவும் அவசியம் நாகர்கோவில் அருகே நடந்த கன்னியாகுமரி நாள் விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பேசியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்தொடு இணைந்த தினத்தை கொண்டாடும் வகையில் நாகர்கோவில் அருகே இறச்சகுளம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பாரதி இதிகாச சங்கட சமிதி அமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என் .ரவி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், "கேரளாவில் இருந்து தமிழ் மொழி பேசும் மக்கள் தமிழகத்தோடு இணைந்த நாளை குமரி நாள் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை ஒட்டி நடந்த போரில் ரத்தம் சிந்திய மக்களை எண்ணி பார்க்க வேண்டும். குமரி மாவட்டம் ஒரு புண்ணிய பூமி. நாம் எதற்காக இந்திய வரலாற்றை எழுத வேண்டுமென சிந்திக்க வேண்டும்.
வெளிநாட்டவர் உருவாக்கிய வழியில் படித்த போதிலும் இந்திய வரலாறு மறைக்கப்பட்டுள்ளது மாற்றப்பட்டுள்ளது. அதனை நாம் மீட்டெடுக்க வேண்டும் என காந்தியடிகள் கூறியதை மறக்கக்கூடாது. 2047 ஆம் ஆண்டு நாம் வளர்ச்சி அடைந்து விடுவோம் என பிரதமர் கூறியுள்ளதை இளைஞர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் சட்டமன்ற பாஜக உறுப்பினர் எம்.ஆர்.காந்தி மற்றும் இந்த அமைப்பு சார்ந்தவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil